சாதனை நாயகனின் மற்றொரு சாதனை... ஆனால் கிரிக்கெட்டில் இல்லை
Recommended Video
வெலிங்டன் : சாதனைகளின் நாயகனாக இருப்பவர் கேப்டன் விராட் கோலி. இவர் நின்றால் சாதனை, நடந்தால் சாதனை என்ற அளவில் சாதனை என்பது இவருக்கு ஜூஜூபியான விஷயமாக உள்ளது.
இந்நிலையில் இவர் தற்போது மற்றொரு சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். இந்தமுறை இவர் சாதித்தது கிரிக்கெட்டில் இல்லை மாறாக இன்ஸ்டாகிராமில்.
இன்ஸ்டாகிராமில் முதல் முறையாக 5 கோடி பாலோயர்சை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு தற்போது விராட் கோலி உள்ளாகியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

சாதனை நாயகன் விராட் கோலி
கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக உள்ள 31 வயதேயான விராட் கோலி, தான் மட்டுமின்றி தன்னுடைய அணியையும் சாதனைகளின் பக்கமாக திருப்பியவர். தான் விளையாடும் போட்டிகளில் ஏதாவது ஒரு சாதனைகளை தொடர்ந்து செய்துவரும் இவர், ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் என்ற சாதனையையும் தொடர்ந்து செய்து வருபவர்.

இந்திய அணி சிறப்பு
கேப்டன் மற்றும் தனிப்பட்ட வீரராகவும் பல்வேறு பொறுப்புகளை கைகொண்டு, அதை சிறப்பாக வழிநடத்தி வருபவர் விராட் கோலி. இவர் தலைமையில் இந்திய அணி சர்வதேச அளவில் அதிகமான கவனத்தை பெற்று வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் வெற்றி என்ற இலக்கை கொண்டு இந்திய அணி விராட் தலைமையில் சிறந்து விளங்குகிறது.

லட்சக்கணக்கில் லைக்ஸ்
தங்களது வேலை பிசியிலும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்களில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் தொடர்ந்து ரசிகர்களுடன் இணைப்பில் உள்ளனர். அவர்களது பகிர்வுகள் பதிவிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளும்.

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள்
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களை அதாவது 5 கோடி பாலோயர்களை கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. இவர் இதுவரை சமூக வலைதளங்களில் 930 பதிவுகளை பகிர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராமில் 20 கோடி பாலோயர்களை கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொண்டுள்ள நிலையில் இந்திய அளவில் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.

குறைந்த இடைவெளியில் பிரியங்கா
பாலிவுட் நடிகைகளை பிரியங்கா சோப்ரா 4.9 கோடி பாலோயர்களையும் தீபிகா படுகோனே 4.4 கோடி பாலோயர்களையும் கொண்டுள்ள நிலையில் 5 கோடி பாலோயர்களை பெற்று விராட் முதலிடத்திற்கு தாவியுள்ளார். இவருக்கும் இரண்டாவது இடத்தில் உள்ள பிரியங்கா சோப்ராவிற்கும் குறைந்த இடைவெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications