For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் ரெக்கார்டை உடைத்த விராட் கோலி.. அடுத்தது சச்சின் தான்! அதுவும் இந்த வருசத்திலே நடக்கும்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஒரு சம்பவம் செய்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 76 ன்கள் சேர்த்தார்.

இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் விராட் கோலி தற்போது ஒரு சாதனை செய்திருக்கிறார். அதன்படி விராட் கோலி பங்கேற்று இந்திய அணி 296 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

 Virat kohli breaks MS Dhoni record andnext in the list is sachin tendulkar

இதன் மூலம் தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்திருக்கிறார். தோனி பங்கேற்று இந்திய அணி 295 போட்டிகளில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய கிரிக்கெட் வரலாற்றிலே அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்று பெருமையை சச்சின் டெண்டுல்கர் படைத்திருக்கிறார்.

சச்சின் இந்தியாவின் 307 வெற்றிகளில் பங்கேற்று இருக்கிறார். தற்போது விராட் கோலி 296 வரை வந்துவிட்டதால், இந்த ஆண்டு சச்சின் சாதனையை முறியடித்து விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த பட்டியலில் ரோகித் சர்மா தற்போது நான்காவது இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 277 வெற்றிகளில் பங்கேற்றுகிறார் ஐந்தாவது இடத்தில் யுவராஜ் சிங் 227 வெற்றிகளிலும் ராகுல் டிராவிட் 216 வெற்றிகளிலும் பங்கேற்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விராட் கோலி மேலும் ஒரு மைல் கல்லை எட்டிருக்கிறார். அதாவது வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பங்கேற்றால் அவர் இந்தியாவுக்காக 500 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

சச்சின், தோனி, டிராவிட் ஆகியோருக்கு பிறகு விராட் கோலி இந்த மைல் கல்லை எட்ட இருக்கிறார். 110 டெஸ்ட் போட்டிகளிலும்,274 ஒரு நாள் போட்டிகளிலும், 115 டி20 போட்டிகளிலும் விராட் கோலி விளையாடி மொத்தமாக 75 சதங்களை அடித்திருக்கிறார்.

Story first published: Sunday, July 16, 2023, 22:00 [IST]
Other articles published on Jul 16, 2023
English summary
Virat kohli breaks MS Dhoni record andnext in the list is sachin tendulkar தோனியின் ரெக்கார்டை உடைத்த விராட் கோலி.. அடுத்தது சச்சின் தான்! அதுவும் இந்த வருசத்திலே நடக்கும்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+