அதிக சதங்கள்.. சச்சினை முந்தி சாதனை படைத்தார் விராட் கோலி.. அடுத்த பிரமாண்டத்திற்கு ரசிகர்கள் ரெடியா
மும்பை: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் உடைக்க முடியாமல் இருந்த சச்சின் டெண்டுல்கரின் பிரமாண்ட சாதனையை விராட் கோலி முறியடித்தார். ஒரே சதத்தால் வரலாற்றை மாற்றினார்.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அட்டகாச பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா (83), மற்றும் சுப்மன் கில் (70) ரன்களை குவிக்க முதல் விக்கெட்டிற்கு 143 ரன்களை குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர். எனினும் அவர்களால் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.

விராட் கோலி சாதனை
அவர்களின் ஆசையை விராட் கோலி நிறைவேற்றி வைத்தார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலி தூண் போல நிலைத்து நின்று சீரான இடைவெளியில் ரன் சேர்த்தார். 87 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 113 ரன்களை விளாசினார். இதன் மூலம் 1214 நாட்களுக்கு பிறகு இந்திய மண்ணில் கோலி சதத்தை அடித்தார்.

பிரமாண்ட சாதனை
இந்நிலையில் இந்த சதத்தின் மூலம் சச்சினின் சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக சதம் அடித்த வீரர் என்ற வீரராக சச்சின் (20) இருந்தார். ஆனால் இன்று கோலியும் 20வது சதத்தை அடித்து அவரை சமன் செய்தார். இந்த சாதனையை சச்சின் 164 போட்டிகளில் செய்த சூழலில், கோலி வெறும் 101 போட்டிகளிலேயே செய்துவிட்டார்.

சச்சினையே முந்தினார்
இதே போல இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினை முந்தியேவிட்டார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் 8 சதங்களை அடித்திருந்தார். ஆனால் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று 9வது சதத்தை பூர்த்தி செய்து ஜாம்பவான் சச்சினையே முந்திவிட்டார்.

இன்னும் 5 சதம்
விராட் கோலி இன்னும் 5 சதங்களை அடித்தால் மற்றொரு ரெக்கார்ட் காத்துள்ளது. அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி தற்போது 45 சதங்களை அடித்துள்ளார். இன்னும் 4 சதங்களை அடித்துவிட்டால் போதும், அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையை கோலி பெற்றுவிடுவார்.


Click it and Unblock the Notifications