Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரெய்ன் லாரா சாதனையை முறி அடித்த விராத் கோஹ்லி

டெல்லி : டெல்லியில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி புதிய சாதனையை படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் கொல்கத்தாவில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

நேற்று மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

 இரண்டாவது நாள் ஆட்டம்

இரண்டாவது நாள் ஆட்டம்

இந்நிலையில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 371 ரன்களை பெற்றது. நேற்று சதம் அடித்துவிட்டு ஆட்டம் இழக்காமல் இருந்த விராத் கோஹ்லி இன்று 2-ஆவது நாள் ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்தார்.

 சச்சின், ஷேவாக் சாதனை சமன்

சச்சின், ஷேவாக் சாதனை சமன்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி அடித்தது 6-ஆவது இரட்டை சதம் ஆகும். தலா இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக் ஆகியோரின் சாதனை விராத் கோஹ்லி சமன் செய்தார்.

 பிரெய்ன் லாரா

பிரெய்ன் லாரா

இந்த 6 சதங்களையும் கேப்டனாக இருக்கும்போதே விராத் கோஹ்லி பெற்றுள்ளார். கேப்டனாக அதிக இரட்டை சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 5 இரட்டை சதங்களை அடித்து பிரெய்ன் லாரா முதலிடத்தில் இருந்தார்.

 4 இரட்டை சதங்கள்

4 இரட்டை சதங்கள்

6 இரட்டை சதங்களை பெற்றதன் மூலம் லாராவின் சாதனையை விராத் கோஹ்லி முறியடித்துவிட்டார். அடுத்த வரிசையில் டான் பிராட்மேன், மைக்கேல் கிளார்க், கிரேமி ஸ்மித் ஆகியோர் 4 இரட்டை சதங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 3, 2017, 12:43 [IST]
Other articles published on Dec 3, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+