ஷேவாக்கின் 2 சாதனைகளை ஒரே நாளில் முறியடித்த கோஹ்லி
ஜெய்பூர்: நேற்று ஜெய்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி வீரேந்தர் ஷேவாக்கின் இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு இரண்டாவது ஒரு நாள் போட்டி நடந்தது.
நேற்றைய போட்டியில் இந்தியா சூப்பராக விளையாடி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியின்போது சிறப்பாக விளையாடிய விராத் கோஹ்லி வீரேந்தர் ஷேவாக்கின் இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளார்.

முதல் சாதனை முறியடிப்பு
ஒரு நாள் போட்டியில் ஷேவாக் 60 பந்துகளில் 100 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. இந்நிலையில் நேற்று வெறும் 52 பந்துகளில் கோஹ்லி 100 ரன்கள் எடுத்து ஷேவாக்கின் சாதனையை முறியடித்தார்.

2வது சாதனை முறியடிப்பு
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 15 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கர்(49) மற்றும் சவ்ரவ் கங்குலியை(22) அடுத்து அதிக சதங்கள் அடித்த வீரராக ஷேவாக் இருந்தார். நேற்றையை சதத்தை சேர்த்து கோஹ்லி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 16 சதங்கள் அடித்துள்ளார். இதையடுத்து ஷேவாக்கின் சாதனையை முறியடித்து அவரின் மூன்றாவது இடத்தை கோஹ்லி பிடித்துவிட்டார்.

ஃபாஸ்டஸ்ட் சதம்
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒரு இந்திய வீரரால் மிக விரைவாக எடுக்கப்பட்ட சதம் நேற்று கோஹ்லி அடித்த சதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

115 போட்டிகளில்
ஷேவாக் 251 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 15 சதங்கள் அடித்திருந்தார். ஆனால் கோஹ்லி 115 போட்டிகளில் விளையாடி 16 சதங்கள் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications