Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பையில் ரூ.34 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய விராட் கோஹ்லி !

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் ரூ.34 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது தாய் மற்றும் அண்ணனுடன் மேற்கு டெல்லியில் உள்ள பாஷிம் விஹாரில் 3 பெட்ரூம் வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு மீரா பாக் பகுதியிலும் வீடு உள்ளது.

Virat Kohli buys Rs 34 crore bungalow in Mumbai

இந்நிலையில் தற்போது அவர் 34 கோடி ரூபாயில் மும்பையின் பிரபலமான வோர்லி பகுதியில் 'பிளாட்' ஒன்றை வாங்கியுள்ளார். 7,171 சதுர அடி பரப்பளவில் கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த பங்களா 35 வது மாடியில் அமைந்துள்ளது. மிகவும் ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் ஐந்து படுக்கையறைகள் உள்ளன.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த பிளாட் இன்னும் முழுமையாக கட்டப்படவில்லை. ஆடம்பரமாக ஐந்து பெட் ரூம் கொண்ட பிளாட்டாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

34 கோடி ரூபாய்க்கு வாங்கினாலும், உடனடியாக இந்த வீட்டில் கோலி குடியேற முடியாது. 2018-ம் ஆண்டுதான் கோலியின் கைக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதே இடத்தில் 2014 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ்சிங்கும் வீடு வாங்கியுள்ளார்.

Story first published: Saturday, June 18, 2016, 0:36 [IST]
Other articles published on Jun 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+