Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரும் கோலியும் 'நெருப்பும் பனிக்கட்டியும்' மாதிரி... ரசிகரின் கலகல கமெண்ட்

மும்பை : எப்போதுமே சமூகவலைதளத்தில் பரபரப்பாக இயங்கிவரும் விராட் கோலிக்கு இந்த கொரோனா வைரஸ் கொடுத்துள்ள ஓய்வு மேலும் சிறப்பாக இயங்க வழிவகுத்துள்ளது.

Recommended Video

Raina compares Dhoni and Rohit Sharma's captaincy

தினமும் ஒரு போஸ்ட், தினமும் ஒரு கொண்டாட்டம், அது தனியாக இருந்தாலும் சரி. மனைவி அனுஷ்காவுடன் இணைந்தும் சரி ஏதாவது ஒரு கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு பரிசாக அளித்துவிடுகிறார் கோலி.

இந்நிலையில் தற்போது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுடன் தான் இணைந்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விராட் கோலி, தாங்கள் இருவரின் உரையாடல்களை விரும்புவதாகவும் நல்ல மனிதர் என்றும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

அமைதியின் மறு உருவம்

அமைதியின் மறு உருவம்

நியூசிலாந்து அணியின் கேப்டனாக உள்ளவர் கேன் வில்லியம்சன். எத்தகைய நெருக்கடியான சூழலையும் அமைதியாகவும் புன்னகையுடனும் சமாளிப்பவர். சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, இரண்டு தொடர்களில் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. இதை அமைதியாக சாதித்து காட்டினார் கேன் வில்லியம்சன்.

கோலி புகழ்ச்சி

கோலி புகழ்ச்சி

இந்நிலையில், சமூக வலைதளத்தில் பரபரப்புடன் பதிவுகளை போட்டுவரும் கேப்டன் விராட் கோலி, கேன் வில்லியம்சனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் வில்லியம்சனுடன் மேற்கொண்ட பேச்சுக்களை தான் விரும்புவதாகவும் அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் புகழ்ந்துள்ளார்.

நெருப்பும் பனிக்கட்டியும்

நெருப்பும் பனிக்கட்டியும்

இந்நிலையில் அமைதியாக நெருக்கடி நேரத்திலும் செயல்படும் கேன் வில்லியம்சன் மற்றும் எப்போதும் ஆக்ரோஷத்துடன் பரபரப்பாக செயல்படும் விராட் கோலி இருவரும் கைகோர்த்து நடந்து செல்லும் அந்த புகைப்படம் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக மாறியுள்ளது. ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு ரசிகர் நெருப்பும் பனிக்கட்டியும் என்று கமெண்ட் செய்துள்ளார்.

வெற்றி கொள்ளாத ஆர்சிபி

வெற்றி கொள்ளாத ஆர்சிபி

ஐபிஎல் போட்டிகளுக்காக சர்வதேச அளவில் வீரர்கள், ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலியும் ஐபிஎல் தொடர் கூடியவிரைவில் துவங்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். ஐபிஎல்லின் சிறப்பான டீமாக இருந்தபோதிலும் ஆர்சிபி இதுவரை ஒரு கோப்பையையும் வெற்றி கொண்டதில்லை. இந்த முறை, அந்த குறையை விராட் கோலி நிவர்த்தி செய்வார் என்பது ரசிகர்களின் நம்பிக்கை

Story first published: Friday, May 22, 2020, 15:02 [IST]
Other articles published on May 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+