5 மாச இடைவெளிய சரியா பயன்படுத்தியிருக்காரு... வலிமையா வந்துருக்காரு விராட்.. சங்கர் பாசு பாராட்டு
துபாய் : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் முடங்கியிருந்தனர்.
தற்போது வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளுக்காக யூஏஇயில் முகாமிட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 5 மாதங்களை சிறப்பாக பயன்படுத்தி தன்னை மிகவும் வலிமையாக விராட் கோலி மாற்றிக் கொண்டுள்ளதாக ஆர்சிபியின் வலிமை மற்றும் கண்டீஷனிங் கோச் சங்கர் பாசு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பிட்னஸ் பயிற்சிகள்
எப்போதுமே தன்னுடைய பிட்னசில் மிகுந்த அக்கறை கொண்டவர் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி. எதற்காகவும் தன்னுடைய பிட்னசை அவர் விட்டுக் கொடுக்க மாட்டார். கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக அவர் வீட்டில் முடங்கியிருந்த போதிலும் அவ்வப்போது தன்னுடைய பிட்னஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

அதிக வலிமையான கோலி
இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட இந்த 5 மாத இடைவெளியை சிறப்பாக பயன்படுத்தி ஆர்சிபியின் கேப்டன் விராட் கோலி முன்பை விட தன்னை அதிக வலிமையாக்கிக் கொண்டுள்ளதாக அத்ந அணியின் வலிமை மற்றும் கண்டீஷனிங் கோச் சங்கர் பாசு பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2015 முதல் 2019 வரை இந்திய தேசிய அணியில் பங்கேற்று வீரர்களின் பிட்னசில் பயிற்சியளித்து வந்தவர் சங்கர் பாசு.

உதவிபுரிந்த பிட்னஸ் பயிற்சிகள்
இந்த 5 மாத இடைவெளியில் தன்னுடைய பிட்னஸ் எந்தவகையிலும் பாதிக்காத வண்ணம் கோலி செயல்பட்டதாகவும், அதுவே அவர் இந்த இடைவெளிக்கு பின்பு பயிற்சிகளில் ஈடுபட்டபோது உடனடியாக அவர் தன்னை சிறப்பாக வெளிப்படுத்த பயன்பட்டதாகவும் பாசு மேலும் கூறினார். கடந்த காலங்களை விட தற்போது விராட் கோலி நல்ல எடையை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பாக கடைபிடித்துவரும் கோலி
தன்னுடைய உடலில் தேவையான பகுதிகளில் சிறப்பான கவனத்தை செலத்தி விராட் கோலி அதை சிறப்பாக இந்த 5 மாதங்களில் ஆக்கியுள்ளதாகவும் சங்கர் பாசு மேலும் கூறினார். தன்னுடைய டயட் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டு வருபவர் கோலி என்று பாராட்டு தெரிவித்துள்ள பாசு, அதையே தன்னுடைய இந்த இடைவெளியிலும் சிறப்பாக அவர் கடைபிடித்துள்ளதையே அவரது வலிமை காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications