Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நானா விக்கெட் எடுத்தேன்!? நம்ப முடியாமல் வாயை பொத்திக் கொண்டு சிரித்த கேப்டன் கோலி

Recommended Video

கேட்ச் பிடித்ததை நம்ப முடியாமல் சிரித்த கேப்டன் கோலி

சிட்னி : விராட் கோலி பயிற்சிப் போட்டியில் ஒரு விக்கெட் எடுத்தார். பின்னர் அதை நம்ப முடியாமல் அவர் சிரித்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டிசம்பர் 6 முதல் ஆட உள்ளது.

அதற்கு முன்னதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா என்ற கத்துக்குட்டி வீரர்கள் கொண்ட அணிக்கு எதிராக ஒரு பயிற்சிப் போட்டியில் ஆடியது.

இந்திய பந்துவீச்சு தடுமாற்றம்

இந்திய பந்துவீச்சு தடுமாற்றம்

இந்த பயிற்சிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியை இந்திய பந்துவீச்சால் வீழ்த்த முடியவில்லை. முன்னணி பந்துவீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியாத நிலையில், கேப்டன் கோலி மூன்றாம் நாள் 2 ஓவர்கள் வீசினார். அதில் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.

விக்கெட் எடுத்த கோலி

விக்கெட் எடுத்த கோலி

அடுத்து நான்காம் நாளிலும் இந்திய பந்துவீச்சு சுமாராக இருந்தது. இதையடுத்து முரளி விஜய், கோலி ஆகியோர் ஆளுக்கு ஐந்து ஓவர்கள் வீசினர். இதில் கோலி சதமடித்து இருந்த ஹாரி நீல்சன் விக்கெட்டை வீழ்த்தினார். கோலி பந்துவீச்சில் நீல்சன் தூக்கி அடித்த கேட்ச்சை உமேஷ் யாதவ் பிடித்தார்.

என்னால் நம்ப முடியவில்லை

என்னால் நம்ப முடியவில்லை

தான் விக்கெட் வீழ்த்தி விட்டோம் என்பதை நம்ப முடியாத கோலி சிறிது நேரம் வாயை பொத்திக் கொண்டு சிரித்தார். பின்னர் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி விக்கெட் வீழ்ச்சியை சக வீரர்களோடு கொண்டாடினார். கோலி முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. கோலி இதுவரை 8 சர்வதேச விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி 544 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 211 ரன்கள் எடுத்து 2 விக்கெட்கள் இழந்து இருந்த போது, போட்டி டிரா ஆனது.

பேட்டிங் ஓகே, பந்துவீச்சு?

இந்த பயிற்சிப் போட்டியை பொறுத்தவரை இந்திய பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இருக்கிறோம் என நிரூபித்துவிட்டனர். ஆனால், இந்திய பந்துவீச்சு மீது இருந்த பெரிய எதிர்பார்ப்பை அடித்து நொறுக்கியுள்ளனர். அஸ்வின், இஷாந்த் சர்மா போன்ற மூத்த வீரர்கள் கத்துகுட்டி அணிக்கு எதிராக விக்கெட் எடுக்க முடியாமல் திணறியதை பார்த்தால் இந்திய அணி, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் என்ன செய்யப் போகிறதோ என்ற கவலை ஏற்படுகிறது.

Story first published: Saturday, December 1, 2018, 16:27 [IST]
Other articles published on Dec 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+