Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன்ஷிப் பிரஷரில் கோலி.. ரஹானே சாதனை கண்ணுக்கு தெரியலையா? - டேவிட் லாயிட்

சென்னை: இந்திய அணியை ஒருவித அழுத்தத்தோடு கேப்டன் விராட் கோலி வழிநடத்துகிறார் என்று டேவிட் லாயிட் தெரிவித்துள்ளார்.

சென்னை டெஸ்ட் போட்டியில் ஏறக்குறைய முடிவு தெரிந்துவிட்டது. 420 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிவரும் இந்தியா, உணவு இடைவேளைக்கு முன்பாகவே ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அல்மோஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துவிட்டது.

 Virat Kohli captaincy under pressure says David Lloyd ind vs eng 1st test day 5

இந்திய அணியில் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாயிட், நான்காம் நாள் ஆட்டத்தின் மிடில் செஷனில் கோலி கேட்ட இரண்டு ரிவியூக்கள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வர்ணனையாளர்கள், அவர் அணியை காப்பாற்றவே அப்படி ரிவ்யூ கேட்டதாக சொன்னார்கள். ஆனால், கோலி அம்பயர்களை அப்போது இன்ஃப்ளூயன்ஸ் செய்யவே நினைத்தார்.
ஆஸ்திரேலிய மண்ணில், அஜிங்க்யா ரஹானே அணியை அற்புதமாக வழிநடத்தினார் என்பது இந்தியாவில் கவனிக்கப்படவில்லை. விராட் கோலி அழுத்தத்தை உணர்கிறார் என்றே நான் கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

விராட் தற்போது பேட்டிங்கில் ஃபார்மில் இல்லை என்பது உண்மை தான். ஆனால், கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை அவர் திறம்பட செயல்படுகிறார் என்பதே லக்ஷ்மன் உள்ளிட்ட இந்திய வீரர்களின் கருத்தாக உள்ளது.

மீண்டு வாங்க விராட் கோலி.

Story first published: Tuesday, February 9, 2021, 16:29 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+