Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Virat Kohli : 20 கோடி கார் வாங்க செலவு செய்த கோலி.. உலகிலேயே 15 பேரிடம் மட்டுமே இருக்கும் அந்த கார்

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்களில் பெரும் பணம் ஈட்டி வரும் விராட் கோலி பல விலை உயர்ந்த கார்களை வாங்கி வைத்திருக்கிறார். அதில் உலகிலேயே 15 பேரிடம் மட்டுமே இருக்கும் ஆடம்பர கார் ஒன்றை அவர் வைத்துள்ளார். அதிலும் இந்தியாவில் அந்த கார் 3 பேரிடம் மட்டுமே உள்ளது.

ஆடி (AUDI) கார்களை அதிக அளவில் வாங்கி வரும் விராட் கோலி ஆடி ஆர்8 எல் எம் எக்ஸ் என்ற காரை வாங்கி இருக்கிறார். இது உலகிலேயே 99 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. அதில் 15 கார்கள் மட்டும் வலது பக்கம் ஓட்டுனர் இருக்கை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இடது பக்கமே ஓட்டுனர் இருக்கை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Virat Kohli Car Collection : Kohli owns Audi R8 LMX limited edition and costliest Bently cars

அந்த வகையில் வலது பக்கம் இருக்க கொண்ட 15 ஆடி ஆர்8 எல் எம் எக்ஸ் கார்களில் ஒன்று விராட் கோலியிடம் உள்ளது. இந்தியாவில் மொத்தமே 3 நபர்கள் மட்டுமே இந்த காரை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் மதிப்பு சுமார் 3 கோடி ஆகும்.

இது தவிர பல்வேறு விலையுயர்ந்த கார்களை விராட் கோலி வாங்கிக் குவித்து இருக்கிறார். அதில் மிக அதிக விலை கொண்டது லம்போர்கினி ஹுராகேன் எனும் கார். இதன் மதிப்பு 4 கோடி அகும். மிகவும் ஸ்டைலான கார்களில் இதுவும் ஒன்று. அடுத்ததாக பென்ட்லி காண்டினெண்டல் என்ற காரை வைத்துள்ளார் கோலி. அதன் மதிப்பு 3.29 முதல் 4 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இது தவிர ரேன்ஜ் ரோவர் வோக் - 2.11 கோடி, பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் - 3 கோடி, டொயோட்டா ஃபார்சுனர் - 40 லட்சம், ஆடி ஆர்8 வி10 பிளஸ் - 2.72 கோடி, ஆடி ஏ8 எல் - 1.58 கோடி, ஆடி கியூ 8 - 1.33 கோடி, ஆடி ஆர்எஸ் 5 - 1.11 கோடி, ஆடி எஸ் 5 - 79 லட்சம், ஆடி கியூ 7 - 81 லட்சம் ஆடி ஏ8எல் - 1.98 கோடி, மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் - 1.3 கோடி ஆகிய கார்களை விராட் கோலி வைத்துள்ளார். இது மட்டுமில்லாமல் சில லம்போர்கினி கார்களை அவர் வாங்கி பயன்படுத்தி விட்டு விற்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த விலை உயர்ந்த கார்களை வாங்க மட்டுமே விராட் கோலி சுமார் 20 கோடிக்கும் மேல் செலவு செய்து இருக்கலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் ஆடி நிறுவன கார்களை ஒன்று விடாமல் வாங்கி வைத்திருப்பது தான். அந்த கார்கள் மீது கோலிக்கு தனி காதல் இருக்கிறது என்பதும் இதில் இருந்து தெரிகிறது.

Story first published: Tuesday, January 16, 2024, 12:07 [IST]
Other articles published on Jan 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+