Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுடசுட ரெடியாகும் இங்கிலாந்து பிட்ச்.. பயிற்சியில் களமிறங்கும் இந்திய வீரர்கள்.. ஒரே வாய்ப்புதான்!

சவுத்தாம்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் வெறித்தனமான பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 18ம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணி வீரர்கள், நேற்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்தனர்.

குவாரண்டைன்

குவாரண்டைன்

லண்டன் சென்று இறங்கிய இந்திய வீரர்கள், சுவாத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதான ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமாக இங்கிலாந்தில் 14 நாட்கள் மிக கண்டிப்பான குவாரண்டைனில் வீரர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே இந்திய வீரர்கள் இந்தியாவில் குவாரண்டைனில் இருந்ததால் இங்கிலாந்தில் 10 நாட்கள் மட்டும் குவாரண்டைன் இருக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாரண்டைன் விதிமுறைகள்

குவாரண்டைன் விதிமுறைகள்

இது மிக முக்கியமான போட்டி என்பதால் இந்த 10 நாள் குவாரண்டைனில் 3 நாட்கள் மட்டும் கடும் குவாரண்டைனில் இருந்ததால் போதும். 4வது நாளில் இருந்து பயிற்சியை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. அதாவது அந்த 3 நாட்களிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் நெகட்டீவ் என முடிவு வந்தால் மட்டுமே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நாளை முதல் பயிற்சி

நாளை முதல் பயிற்சி

இந்நிலையில் வீரர்கள் பயிற்சியை மேற்கொள்ள மைதானம் தயார் நிலையில் உள்ளது. அநேகமாக அவர்கள் நாளை முதல் தங்களது பயிற்சியை மேற்கொள்வார்கள் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ-ம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக நியூசிலாந்து முன்கூட்டியே இங்கிலாந்து சென்றடைந்து, அங்கு அந்நாட்டுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணிக்கு வலைப்பயிற்சி மட்டுமே உள்ளது. எனவே இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள தீவிரமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, June 5, 2021, 20:11 [IST]
Other articles published on Jun 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+