Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படிலாம் செய்யாதீங்க ரோகித்..!! விராட் கோலி பயிற்சியாளர் அளித்த அட்வைஸ்.. திருந்துவாரா ஹிட்மேன்?

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு விராட் கோலியின் பயிற்சியாளர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

கூல் கேப்டனாக அறியப்பட்ட ரோகித் சர்மா, சமீப காலமாக கோபக்கார கேப்டனாக வலம் வருகிறார்.

வீரர்கள் கேட்சை விட்டால் பிச்சை பச்சையாக திட்டுவது, மற்ற வீரர்கள் எதாவது தவறு செய்தால் எரிந்து விழுவது என்று செயல்படுகிறார் ரோகித்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டி20 போது சீனியர் புவனேஸ்வர் குமார் கேட்சை விட்டதற்கு, பந்தை ஓங்கி உதைத்து சர்ச்சையில் சிக்கினார் ரோகித் சர்மா. இந்த நிலையில், விராட் கோலியின் சின்ன வயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா, கேப்டன் ரோகித் சர்மா களத்தில் சக வீரர்களை திட்டுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Virat kohli coach slams rohit sharma for scolding players

ரோகித் சர்மா அமைதியான கேப்டனாக அறியப்பட்டவர். ஆனால் இப்போது கோபக்காரராக இருக்கிறார். சக வீரர்களை மக்கள் முன் திட்டக் கூடாது. களத்தில் திட்டாமல், அவர்களது தவறை அமைதியான முறையில் எடுத்து சொல்ல வேண்டும்.

ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது பாராட்டுக்குரியது. கோலி கேப்டனாக இருக்கும் போது தோனி தான், ஃபில்டிங்கை சரி செய்து நிறுத்துவார். இது போன்று ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 23, 2022, 20:48 [IST]
Other articles published on Feb 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+