Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. வீரர் ஸ்டோனிஸ் மீது மோதிய கோலி.. நடவடிக்கை எடுக்குமா ஐசிசி.. ஃபயர் விடும் ரிசிகர்கள்

சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி , செய்த சம்பவம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 270 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.

இதில் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழக்க, இந்திய அணி சரிவை சந்தித்தது.

 ஆஸி. வீரர்கள் யுத்தி

ஆஸி. வீரர்கள் யுத்தி

அப்போது களத்தில் நின்ற விராட் கோலியும், கேஎல் ராகுலும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி களத்தில் நின்ற வரை இந்திய அணி தான் வெல்லும் நிலையில் இருந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் எப்போதும் செய்யும் ஒரு வேலையை விராட் கோலி, அவர்களுக்கே செய்து காட்டினார். எப்போதும், ஆஸ்திரேலிய வீரர்கள் எதிரணி வீரர்களை வம்பிழுத்து, அவர்களுடைய கவனத்தை திசை திருப்ப செய்வார்கள்.

 ஸ்டோனிஸ் உடன் மோதல்

ஸ்டோனிஸ் உடன் மோதல்

நேற்று, அப்படி ஒரு யுத்தியை தான் விராட் கோலி கையாண்டார். ஆட்டத்தின் 20.3வது ஓவரில் ஸ்டோனிஸ் ராகுலுக்கு தொடர்ந்து நெருக்கடி தரும் வகையில் பந்துவீசினார். அப்போது எதிர் திசையில் நின்று கொண்டு இருந்த விராட் கோலி, வேண்டும் என்றே, ஸ்டோனிஸ் நெஞ்சில் மோதினார்.

 வேண்டுமென்றே செய்தார்

வேண்டுமென்றே செய்தார்

இதனால் ஷாக் ஆன ஸ்டோனிஸ் விராட் கோலியை பார்த்து விட்டு, பிறகு சென்றுவிட்டார். இந்த சம்பவத்தை அப்போது நடுவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும், ரசிகர்கள் கண்ணில் சிக்கி கொண்டது. இதனால் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கோலியின் கெத்தை பார்த்தீங்களா என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 நடவடிக்கை பாயுமா?

நடவடிக்கை பாயுமா?

எனினும் இது ஐசிசியின் நன்நடத்தை விதியின் படி தவறாகும். இதற்கு ஒரு போட்டியில் விளையாட தடை கூட விதிக்கப்படலாம். ஏற்கனவே இப்படி தான் டெஸ்ட் போட்டி ஒன்றில் வாட்சனை, கம்பீர் கையால் வேண்டும் என்றே மோதுவார். இதற்காக கம்பீருக்கு, ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 23, 2023, 12:14 [IST]
Other articles published on Mar 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+