Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பசி கொண்ட வேங்கை மாதிரி இப்ப இருப்பாரு... பெரிய சவால்தான்... யாரப்பத்தி சொல்றாரு பட்லர்?

சென்னை : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.

இதையொட்டி இரு அணி வீரர்களும் குவாரன்டைனில் உள்ளனர். தொடர்ந்து பயிற்சிகளிலும் போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.

குழந்தை பிறப்பு காரணமாக சிறிது காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த விராட் கோலி, தற்போது மீண்டும் இந்த தொடரின்மூலம் விளையாடவுள்ள நிலையில் அவர் சிறப்பாக அணியை வழிநடத்துவார் மற்றும் பேட்டிங் செய்வார் என்று இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

5ம் தேதி துவக்கம்

5ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் அடுத்தடுத்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதலில் ஆடவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் சென்னையில் குவாரன்டைனில் உள்ளனர்.

மீண்டும் போட்டிகளில் பங்கேற்பு

மீண்டும் போட்டிகளில் பங்கேற்பு

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பினார் விராட் கோலி. இந்நிலையில் மீண்டும் அவர் இந்த தொடரின்மூலம் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

ஜோஸ் பட்லர் ஆதங்கம்

ஜோஸ் பட்லர் ஆதங்கம்

இதனிடையே, விராட் கோலி மீண்டும் அணியில் இணைந்துள்ளது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவால் என்று இங்கிலாந்து அணியின் குறைந்த ஓவர்கள் போட்டிகளின் துணை கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். மேலும் சிறிது காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால், மிகுந்த தீவிரத்துடன் அவர் அணியை வழிநடத்துவார் என்றும் பேட்டிங் செய்வார் என்றும் பட்லர் கூறியுள்ளார்.

ஸ்பின்னர்களுக்கு சவால்

ஸ்பின்னர்களுக்கு சவால்

தொடர்ந்து பேசிய அவர் தனது அணியின் கேப்டன் ஜோ ரூட் இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்பின்னர்களின் பந்துளில் அதிகமாக ஸ்கோர் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை -இங்கிலாந்து தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 31, 2021, 12:55 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+