Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு கேக்கத்தான் தெரியும்... அனுஷ்காவிடம் மாட்டிக் கொண்ட கேப்டன்

மும்பை : சமூக வலைதளங்களில் மட்டுமின்றி நிஜத்திலும் ஆதர்ச தம்பதிகளாக தங்களை நிரூபித்துக் கொண்டுள்ளது கேப்டன் விராட் கோலி அனுஷ்கா ஜோடி.

தங்களுக்குள் என்டர்டெயின்மெண்ட் செய்துக் கொள்வதோடு தங்களது சேட்டைகள், சண்டைகள், விருப்பங்கள், கனவுகள் உள்ளிட்டவற்றை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக போஸ்ட் செய்து ரசிகர்களையும் குஷிப்படுத்தி வருகிறது இந்த ஜோடி.

தற்போது அவர்கள் தங்களுக்குள் மாறி மாறி, தங்களுடைய பீல்ட் குறித்து கேள்விகள் கேட்டுக் கொண்டனர். இதில் வெற்றி பெற்றது என்னவோ அனுஷ்கா சர்மாதான்.

ஆதர்ச தம்பதி

ஆதர்ச தம்பதி

கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி மிகவும் ஆதர்ச தம்பதியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். இவர்களின் போஸ்ட்கள் இவர்களின் பல்வேறு வாழ்நிலைகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் இவர்கள் போஸ்ட்களுக்கு அதிகப்படியான லைக்குகளும் கிடைத்து வருகிறது.

கேள்விகள்.. பதில்கள்

கேள்விகள்.. பதில்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்திலும் இவர்கள் பதிவிட்ட அதிகப்படியான போஸ்ட்களுக்கு அதிகமான கமெண்ட்கள், லைக்குகள் கிடைத்தன. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் தங்களது பீல்ட் குறித்த கேள்விகளை மற்றவர்களிடம் கேட்டு அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர்.

பதிலளிக்க திணறிய கோலி

விராட் கோலி கிரிக்கெட் குறித்த கேள்விகளை அடுக்க, ரேபிட் பயர் ரவுண்ட் போல, அதற்கு அனுஷ்கா சர்மா சட் சட்டென்னு பதில்களை அடுக்கினார். ஆனால் சினிமா குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க விராட் கோலி திணறினார். அவரது சொதப்பலான பதிலையடுத்து யார் வெற்றி பெற்றது என்று அவர் ரசிகர்களிடமே கேள்வி எழுப்பினார்.

கோப்பையை வெல்ல விராட் உறுதி

கோப்பையை வெல்ல விராட் உறுதி

அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் 2020 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி பங்கேற்று ஆடவுள்ளார். இதுவரை அந்த அணிக்காக கோப்பையை பரிசளிக்காத விராட் கோலி, இந்த முறையாவது கோப்பையை பெற்றுத் தருவாரா என்பதே ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி

Story first published: Wednesday, August 12, 2020, 21:09 [IST]
Other articles published on Aug 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+