Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 ஆண்டுகளில் வாயை பிளக்க வைக்கும் சாதனை செய்த விராட் கோலி.. மெய் சிலிர்த்த ரசிகர்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி செய்த சாதனைகளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் குறிப்பாக ஒரு சாதனை கிரிக்கெட் உலகையே வாயை பிளக்க வைக்கும் வகையில் உள்ளது.

விராட் கோலி 2008இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் 2024 வரையிலான 16 ஆண்டுகளில் அவருக்கு நிகராக வேறு எந்த ஒரு கிரிக்கெட் பேட்ஸ்மேனும் செய்யாத பல சாதனைகளை அவரது ரசிகர்கள் பட்டியலிட்டு உள்ளனர். 2008 முதல் 2024 வரையிலான 16 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தது விராட் கோலி தான். இதே காலகட்டத்தில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்ததும் விராட் கோலி தான்.

Virat Kohli india

இந்த 16 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதம் அடித்ததும் விராட் கோலி தான். அதேபோல ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் அதிக சதம் மற்றும் அரை சதம் அடித்த வீரர் விராட் கோலி தான். இந்த 16 ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி தொடர்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும், அதிக ஐசிசி விருதுகள் வென்ற வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்று இருக்கிறார்.

மேலும், இந்த 16 ஆண்டுகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் வென்ற வீரர் விராட் கோலி தான். இப்படி அவரது சாதனையை அவரது ரசிகர்கள் பட்டியலிட்டு மெய் சிலிர்த்து வருகின்றனர். மேலும், ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை (2011), டி20 உலக கோப்பை (2024) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை (2013) என கிரிக்கெட்டின் மூன்று முக்கிய தொடர்களில் ஒரு வீரராக வெற்றி பெற்று இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 26,942 ரன்கள் குவித்துள்ளார் விராட் கோலி. அவரது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் சராசரி 53 ஆகும். சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்கள் மற்றும் 140 அரை சதங்கள் அடித்துள்ளார்.

Story first published: Sunday, August 18, 2024, 13:12 [IST]
Other articles published on Aug 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+