Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆக்ஷன் நாயகனின் அதிரடி சிக்சர்கள்... ஐபிஎல்லில் 200 சிக்ஸ்களை பூர்த்தி செய்த ஆர்சிபி ஹீரோ

துபாய் : ஐபிஎல்லின் 44வது லீக் போட்டியாக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று பேட்டிங்கை ஆர்சிபி தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்த போட்டியின்மூலம் தன்னுடைய 200வது சிக்சை விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார். ஐபிஎல்லில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள 5வது பேட்ஸ்மேன் இவர்.

Virat Kohli completed 200 sixes in IPL

பரபரப்பான ஐபிஎல் போட்டிகளுக்கிடையில் தினந்தோறும் ஒரு சாதனையை ஒவ்வொரு வீரரும் நிகழ்த்தி வருகின்றனர். 100 கேட்ச்கள், 100 போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல்லில் 200 சிக்ஸ்களை இன்றைய சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார்.

இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள 5வது வீரர் இவர். முன்னதாக, ஐபிஎல்லில் கிறிஸ் கெயில் 336 சிக்ஸ்களையும், ஏபி டீ வில்லியர்ஸ் 231 சிக்ஸ்களையும் எம்எஸ் தோனி 216 சிக்ஸ்களையும் ரோகித் சர்மா 209 சிக்ஸ்களையும் அடித்துள்ள நிலையில் தற்போது விராட் கோலி தனது 200வது சிக்சை பூர்த்தி செய்துள்ளார்.

Story first published: Sunday, October 25, 2020, 18:38 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+