Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிலெய்டில் 500 ரன்கள்... 4வது வெளிநாட்டு வீரர்... கேப்டனின் தொடர் சாதனைகள்!

அடிலெய்ட் ஓவல் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவலில் துவங்கி முதல் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது.

இந்த போட்டியில் 74 ரன்கள் எடுத்து கேப்டன் விராட் கோலி ரன் அவுட்டானார்.

இந்நிலையில் அடிலெய்டில் 500 ரன்களை பூர்தி செய்துள்ள அவர், இந்த சாதனையை எட்டியுள்ள 4வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்தியா 233 ரன்கள்

இந்தியா 233 ரன்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 233 ரன்களை 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா பெற்றுள்ளது. துவக்கத்தில் தடுமாறினாலும் கோலி, ரஹானே உள்ளிட்டவர்களின் சிறப்பான மற்றும் நிதானமான ஆட்டத்தால் இந்தியா தன்னுடைய வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.

74 ரன்களை அடித்த கேப்டன்

74 ரன்களை அடித்த கேப்டன்

வெளிநட்டில் இந்தியா ஆடும் முதல் பகலிரவு போட்டி இது. இந்த போட்டியில் விராட் கோலி சிறப்பான ஆஸ்திரேலிய பந்துவீச்சிற்கு இடையில் தன்னுடைய அரைசதத்தை 123 பந்துகளில் எட்டியுள்ளார். சிக்ஸ் மற்றும் பவுண்டரிகள் என அவர் 74 ரன்களை இன்றைய போட்டியில் எடுத்துள்ளார்.

4வது வெளிநாட்டு வீரர்

4வது வெளிநாட்டு வீரர்

அடிலெய்ட் ஓவலில் இந்த போட்டி நடைபெற்ற நிலையில், இந்த மைதானத்தில் தனது 500வது ரன்னை கேப்டன் விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார். இந்த மைதானத்தில் இந்த சாதனையை எட்டியுள்ள 4வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமை இதன்மூலம் விராட்டிற்கு கிடைத்துள்ளது.

வெளிநாட்டில் அடித்த இந்திய வீரர்

வெளிநாட்டில் அடித்த இந்திய வீரர்

மேலும் பகலிரவு போட்டியில் வெளிநாட்டில் அரைசதத்தை பூர்த்தி செய்துள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் விராட்டிற்கு கிடைத்துள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 91 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி, 5,192 ரன்களை 61.81 சராசரியில் எடுத்துள்ளார்.

Story first published: Thursday, December 17, 2020, 18:55 [IST]
Other articles published on Dec 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+