Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆமாய்யா, அனுஷ்காவை காதலிக்கிறேன், தெரியாத மாதிரி கேட்காதீங்க: கோஹ்லி பாய்ச்சல்

மும்பை: நானும் நடிகை அனுஷ்கா சர்மாவும் காலதிக்கிறோம். தெரிந்து கொண்டே அதை பற்றி கேட்டால் என்ன அர்த்தம் என கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

Virat Kohli confirms he is seeing Anushka Sharma, asks for privacy

நானும் அனுஷ்காவும் எதையும் மறைக்கவில்லை. நான் மறைக்கவும் விரும்பவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் ஒரே விஷயம் பற்றி கேட்டால், விவாதித்தால் அது சரியில்லை. இரண்டு பேரை சில இடங்களில் ஜோடியாக பார்த்துவிட்டு அதன் பிறகும் இது உறுதியா என்று கேட்கிறார்கள்? தெரிந்து கொண்டே அது பற்றி எதற்காக கேள்வி கேட்க வேண்டும்.

நாங்கள் எதுவும் தவறான விஷயத்தை செய்யவில்லையே. இது பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. இது எங்களின் தனிப்பட்ட விஷயம். அதை மீடியா உள்பட அனைவரும் மதிக்க வேண்டும் என்றார்.

அனுஷ்காவும், கோஹ்லியும் காதலிப்பதாக ஊரெல்லாம் கூறியதே தவிர அவர்கள் தெரிவிக்கவில்லை. கோஹ்லியாவது இப்படி ஏதாவது பொசுக்கென்று தெரிவிப்பார். ஆனால் அனுஷ்கா இந்த விஷயத்தை பற்றி வாய் திறந்ததே இல்லை.

இரண்டு பேர் ஒன்றாக சுற்றினால் காதல் என்று தெரியாதா என கோஹ்லி கேட்டுள்ளார். காதல் என்று மக்கள் கூறினால் நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்று ஒரு வசனத்தை பேசிவிட்டு நடையை கட்டுவார்களே அதனால் தான் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்கிறார்கள்.

Story first published: Friday, November 21, 2014, 9:57 [IST]
Other articles published on Nov 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+