Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரோட விக்கெட் தான் எப்பவுமே என்னோட டார்கெட்... யாரப்பத்தி சொல்றாரு விராட் கோலி?

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் இன்று துவங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் 100வது டெஸ்ட் போட்டி.

இந்நிலையில் ஜோ ரூட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ள கேப்டன் விராட் கோலி, அவருடைய விக்கெட் தான் எப்போதுமே தனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் இன்று துவங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. முதலில் பர்ன்ஸ் மற்றும் சிப்லி ஆகியோர் களமிறங்கி ஆடி வருகின்றனர்.

ரூட்டிற்கு விராட் பாராட்டு

ரூட்டிற்கு விராட் பாராட்டு

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக இந்த போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 100வது போட்டியை ஜோ ரூட் விளையாடுகிறார். இதை முன்னிட்டு கேப்டன் விராட் கோலி அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

முக்கிய அடையாளம்

முக்கிய அடையாளம்

டெஸ்ட்டில் 100 போட்டிகளை விளையாடுவது என்பது எளிதான விஷயமில்லை என்றும் இதுகுறித்து ஜோ ரூட் மிகுந்த பெருமை கொள்ளலாம் என்றும் இன்னும் அதிக ஆண்டுகள் அவர் விளையாட வேண்டும் என்றும் விராட் கோலி மேலும் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் முக்கிய அடையாளமாக ரூட் விளங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய விக்கெட் ஜோ ரூட்

முக்கிய விக்கெட் ஜோ ரூட்

ஆனால் இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டாக தான் ரூட்டை கருதுவதாகவும் அவருடைய விக்கெட்தான் தனது டார்கெட் என்றும் விராட் மேலும் கூறினார். அவருடைய பல போட்டிகளை பார்த்துள்ளதாகவும் அதை தற்போது நினைவு கூர்வதாகவும் தெரிவித்த விராட், எதிர்காலத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து தங்களது பயணம் குறித்து பேசுவோம் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Friday, February 5, 2021, 10:34 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+