விராட் கோலி இன்று படைத்த 3 மகத்தான சாதனை.. IPL தொடரில் யாருமே செய்யல.. வேற லெவல் செய்கை
மொஹாலி : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார். விராட் கோலி ஆர்சிபி அணியின் ரன் மிஷினாக விளங்கி வருகிறார்.
ஆர்சிபி அணியின் பேட்டிங்கை தொடர்ந்து தமது தோளில் சுமந்த வரும் விராட் கோலி, சாம்பியன் பட்டம் என்ற பரிசு மட்டும் கிடைத்தது அல்ல. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் நன்றாக விளையாடினார் என்பதை அவர் அடித்த அரைசதம், சதத்தை வைத்து தான் சொல்வார்கள்.

ஆனால், அதுவே டி20 கிரிக்கெட் போட்டியாக இருந்தால் அரைசதம், சதத்தையும் சேர்த்து பேட்ஸ்மேன் எத்தனை முறை 30 ரன்களை அடித்து இருக்கிறார்கள் என்பதை பார்ப்பார்கள். அந்த வகையில் இன்றைய பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 30 ரன்களை கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 முறை 30 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் ஷிகர் தவான் 91 முறையும், டேவிட் வார்னர் 90 முறையும், ரோகித் சர்மா 85 முறையும், சுரேஷ் ரெய்னா 77 முறையும் 30 ரன்களை கடந்து முதல் 5 இடத்தில் இருக்கிறார்கள். விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் 40 பந்துகளில் எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். இதன் மூலம் கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் 6500 ரன்களை கடந்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் தோனி 6176 ரன்களுடன் 2வது இடத்திலும், ரோகித் 5489 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் சாதாரண வீரராக களமிறங்கியுள்ள டுபிளஸிஸ், விராட் கோலியை விட, இரு மடங்கு அதிரடியாக விளையாடுகிறார். 31 பந்துகளில் டுபிளஸிஸ் அரைசதம் கடந்துள்ளார். இதில் 3 சிக்சரும், 4 பவுண்டரியும் அடங்கும். பஞ்சாப் வீரர் பிரார் வீசிய ஒரு ஓவரில் மட்டும் டுபிளஸிஸ் 17 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications