Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி புதிய சாதனை..! டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி சதம்..!! ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்தார்..!!

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்ட்டில் புதிய சாதனை படைத்தார்

விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி 2 ஆண்டுகள் ஆகிறதே, நேற்று கூட 79 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டாரே என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், நாம் பேசுவது விராட் கோலியை பற்றி, அவரை ஒரு பேட்ஸ்மேன் என்று சின்ன வட்டத்திற்குள் சுருக்க முடியாது.

விராட் கோலி முடிவு

விராட் கோலி முடிவு

தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக இந்திய வீரர்கள் பந்துவீசினர். இதன் பலனாக பேட்டில் பந்து எட்ஜ் ஆகியும், சிலிப்பில் நிற்கும் ஃபில்டர்களுக்கு முன்பே பந்து தரையில் பட்டது. இதனால் நன்றாக பந்துவீசியும், விக்கெட் கிடைக்காமல் இருந்தது, இந்தியாவின் பிடி ஆட்டத்தை விட்டு சென்றதை உணர்ந்த விராட் கோலி முகமது ஷமியை பந்துவீச அழைத்தார்

அபார கேட்ச்

அபார கேட்ச்

முகமது ஷமியை பந்துவீச விராட் கோலி அழைத்தார். அப்போது டெம்பா பெவுமா அதை அடிக்க முயன்று பேட்டில் பட , அது ஸ்லிப்பை நோக்கி பறக்க, விராட் கோலி மின்னல் வேகத்தில் பாய்ந்து கேட்சை பிடித்தார். அதாவது பந்து முன்னாலே விழுந்துவிடும் என்பதை உணர்ந்து, விராட் கோலி ஒரு சிறந்த கேட்சை பிடித்தார்

கோலியின் 100வது கேட்ச்

கோலியின் 100வது கேட்ச்

வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்வார்களே, அதை தான் விராட் கோலி செய்தார். இதன் மூலம் சர்வதேச டெட் கிரிக்கெட்டில் 100 கேட்ச் பிடித்து விராட் கோலி சாதனையை மேற்கொண்டார். இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் 100 கேட்ச்களை பிடித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெறுகிறார்.

சாதனை

சாதனை

இந்த சாதனையை இதற்கு முன் டிராவிட், சச்சின், அசாரூதீன் ஆகியோர் படைத்துள்ளனர். Catches Win Matches என்று அடிக்கடி கவாஸ்கர் சொல்வார். விராட் கோலியின் இந்த கேட்ச் மூலம் அட்டத்தின் போக்கும் மாறியது. கோலி கேட்ச் பிடித்தாலும், இந்திய வீரர்கள் சிலர் ஒரிரு கேட்சை கோட்டைவிட்டனர்.

Story first published: Wednesday, January 12, 2022, 21:59 [IST]
Other articles published on Jan 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+