Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 இமாலய சாதனை படைத்த கோலி.. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 13 ஆயிரம் ரன்கள்..நம்பர் 3வது வீரராக சாதனை

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் விராட் கோலி பல்வேறு சாதனைகளைப் படைத்து அசத்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக இன்று பட்டையை கிளப்பிய விராட் கோலி தன்னுடைய 47 வது சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார்.

இந்த இன்னிங்ஸில் விராட் கோலி இரண்டு சிக்ஸர்களும் ஏழு பவுண்டர்களையும் அடித்திருக்கிறார். இன்று போட்டியில் விராட் கோலி பல ரெக்கார்டுகளை படைத்திருக்கிறார். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

Virat kohli created numerous record today vs pakistan in asia cup

சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 77 சதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை 594 வின்னிங்சில் படைத்த நிலையில், கோலி 561 இன்னிங்ஸில் இந்த மைல்கலை எட்டிறிருக்கிறார். இதைப் போன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் 435வது இன்னிங்சில் தான் 45 சதத்தை தொட்டார். ஆனால் விராட் கோலி 267 இன்னிங்சில் சதத்தை அடித்து இருக்கிறார்.

இதேபோன்று கோலி 99 ரன்களை கடந்த போது விராட் கோலி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ரன்களை தொட்ட வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இந்த சாதனையை விராட் கோலி 267வது இன்னிங்சில் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்சில் தொட்ட நிலையில் விராட் கோலி அதனை முறியடுத்து இருக்கிறார்.

இதேபோன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது வீரராக விராட் கோலி ஒரு பெரிய ரெக்கார்டை படைத்திருக்கிறார். இதன்மூலம் நம்பரும் மூன்றாவது வீரராக களம் இறங்கியுள்ள விராட் கோலி 296 இன்னிங்சில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு கேன் வில்லியம்சன் 306 இன்னிங்சிலும் , சங்கக்காரா 310 இன்னிங்சிலும்,டிராவிட் 316 இன்னிங்சிலும், பாண்டிங் 319 இன்னிங்சிலும் எட்டியதே சாதனையாக கருதப்படுகிறது.

இதே போன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது விராட் கோலி, ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்திருக்கிறார். தற்போது இருவரும் 112 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 145 முறையும், சங்கக்கார 118 முறையும் அடித்து இருக்கிறார்கள்.

இதேபோன்று ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை பனிரெண்டாவது முறையாக விராட் கோலி பெற்றிருக்கிறார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பதினாறு முறையும், சங்ககாரா பதினைந்து முறையும், ஜெயவர்த்தனை 14 முறையும், ரிக்கி பாண்டிங் 13 முறையும் பெற்றிருக்கிறார்கள். இதேபோன்று பல அணிகள் பங்கேற்கும் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆயிரம் ரன்களை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையும் கோலி ப்படைத்திருக்கிறார்.

Story first published: Monday, September 11, 2023, 19:00 [IST]
Other articles published on Sep 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+