என்னத்த சொல்றது… பீல்டிங் சொதப்பல்… ஸ்டம்பிங்கிலும் கோட்டை விட்டோம்… குமுறும் கோலி
Recommended Video

மொகாலி: முக்கிய ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவவிட்டது, பீல்டிங் சரியாக செய்யாது தோல்விக்கு காரணம் என்று கேப்டன் விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றிபெற்றது. அந்த அணியின் ஆஸ்டன் டார்னர் இந்திய அணியிடமிருந்து வெற்றியை பறித்தார்.
ஆஸி.யின் இந்த வெற்றி, தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற இந்தியாவின் நம்பிக்கையை அசைத்து பார்த்துள்ளது. கடைசி 2 போட்டிகளிலும் தோற்றதால் இரு அணிகளும் 2க்கு 2 என்ற சமநிலையில் உள்ளன.

தோல்விக்கு என்ன காரணம்?
இந் நிலையில் அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங், முக்கிய ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டைவிட்டதே காரணம் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

முடிவு தவறானது
கடந்த போட்டியைப் போலவே பனிப்பொழிவு பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2வது முறையாக தவறான முடிவை எடுத்துவிட்டோம்.

சிறந்த ஆட்டம்
ஆஸ்திரேலிய அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிச்சயம் அதனை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

பந்துவீசுவதில் சிரமம்
கடந்த போட்டியில், பனிப்பொழிவு காரணமாக விஜய் சங்கர், ஜாதவ் இருவரும் பந்துவீசிவதில் சிரமப்பட்டனர். அதனால்தான் இப்போட்டியில் சாஹலை சேர்த்தோம். இந்த போட்டியிலும் மீண்டும் அதே பனிப்பொழிவு பிரச்னை.

2 போட்டிகளில் தோல்வி
பீல்டிங்கின்போது முக்கிய வாய்ப்புகள், முக்கியமான ஸ்டம்பிங் வாய்ப்பை வீரர்கள் கோட்டை விட்டது கடினமாக அமைந்தது. இந்த இரு போட்டிகளிலும் தோற்றுள்ளோம்.

மிக பெரிய வாய்ப்பு
எனவே, அணியின் ஆட்டத்தை எதிர்வரும் ஆட்டங்களில் மேம்படுத்திக்கொள்ள மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். நிச்சயம் 5வது ஒருநாள் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்றார்.

5வது ஒருநாள் போட்டி
இந்தியா,ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை டெல்லியில் நடைபெறுகிறது. அந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் தங்களது முழுபலத்துடன் விளையாடும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications