For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்தார் விராட் கோஹ்லி

சௌதாம்ப்டன்: இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி இரண்டாம் நாளில் தனது முதல் இன்னிங்ஸ்-ஐ ஆடி வருகிறது.

Virat kohli crossed 6000 runs in international test cricket


இப்போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 6 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை அடித்த 10-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

குறைந்த இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் சர்வதேச அளவில் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் 117 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை கடந்ததே இந்திய வீரர் ஒருவரின் சாதனையாகும். விராட் கோஹ்லி 119 இன்னிங்ஸ்களில் விளையாடி இரண்டாமிடம் பிடித்தார்.

விராட் கோஹ்லி முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி இதுவரை 119 இன்னிங்ஸ்களில் விளையாடி 6040 ரன்களை குவித்துள்ளார்.

Story first published: Saturday, September 1, 2018, 16:22 [IST]
Other articles published on Sep 1, 2018
English summary
Virat kohli crossed 6000 runs in international test cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X