Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி கூறிய ஒற்றை வார்த்தை... தோனி - கோலி நட்பால் நெகிழ்ச்சியடைந்த நெட்டிசன்ஸ்.. மரியாதையே தனி தான்!

மும்பை: தோனியுடனான நட்பு குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி நறுக்கென்று பதிலளித்துள்ளார்.

Recommended Video

Dhoni பற்றி Kohli கூறிய ஒற்றை வார்த்தை! நெகிழ்ச்சியடைந்த நெட்டிசன்ஸ் | OneIndia Tamil

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன்18ல் தொடங்குகிறது.

இதற்காக இந்திய வீரர்கள் தயாராகி வரும் நிலையில் கேப்டன் விராட் கோலி, மட்டும் தோனியுடனான நட்பை இந்நேரத்தில் நினைவுக்கூர்ந்துள்ளார்.

அதிரடி ஜோடி

அதிரடி ஜோடி

விராட் கோலி மற்றும் தோனி ஆகியோர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய பெயர்கள் ஆவர். அவர்களின் சாதனையை பார்த்தால் அனைவரும் வாயைப்பிளந்து பார்ப்பார்கள். அவர்கள் எப்போதுமே தங்களுக்குள் இருக்கும் நல்ல நட்பை களத்தில் வெளிப்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது இருவரும் சேர்ந்து காட்டும் அதிரடியை நம்மால் காண முடியவில்லை.

 பிசிசிஐ பபுள்

பிசிசிஐ பபுள்

இந்நிலையில் விராட் கோலி அவர் குறித்து மனம் நெகிழ ஒரு வார்த்தையை கூறியுள்ளார். கோலி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக பிசிசிஐ சார்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பயோபபுளில் உள்ளார். ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இதிலும், எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக 14 நாட்கள் குவாரண்டைன் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 கோலி - நட்பு

கோலி - நட்பு

இந்த பபுளில் டைம் பாஸ் ஆகாமல் தவித்து வரும் விராட் கோலி, நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உறையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் தோனி குறித்து சுருக்கமாக சொல்லுங்கள் என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கோலி, 'நம்பிக்கை மற்றும் மரியாதை என்றால் அது தோனி தான் எனக்கூறினார். இந்திய அணிக்கு கேப்டன் ஆன பிறகு தோனி குறித்து இவ்வளவு பணிவாக கோலி கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் வருத்தம்

விராட் கோலி கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமானதில் இருந்து தோனிக்கு கீழ் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆனால் தோனி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது சர்வதேச போட்டிகள் ஓய்வை அறிவித்தார். அதில் இருந்து இருவரின் அதிரடியையும் ஒரே அணியில் பார்க்கமுடியவில்லை என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Story first published: Sunday, May 30, 2021, 17:07 [IST]
Other articles published on May 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+