For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திருவனந்தபுரம் வந்த இந்திய அணி.. விராட் கோலி மட்டும் மிஸ்ஸிங்.. நாளைய ஆட்டத்தில் பங்கேற்பாரா?

திருவனந்தபுரம்: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் பங்கேற்க வந்த இந்திய அணியிடனருடன் நட்சத்திர வீரர் விராட் கோலி இல்லாதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Virat Kohli didnt travel with Indian team to Trivandrum for the World Cup warmup game against Netherlands

ஆனால் டாஸ் போடப்பட்ட பின் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. நீண்ட நேரம் காத்திருந்த நடுவர்கள், பின்னர் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதனால் பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்த பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க திருவனந்தபுரம் வந்துள்ளது.

நாளை நடக்கவுள்ள உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடவுள்ளன. இதற்காக தனி விமானத்தில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் திருவனந்தபுரம் வந்தனர். அப்போது விமான நிலையத்தில் கூடியிருந்த இந்திய அணி ரசிகர்கள் ஒன்றுகூடி வீரர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

ஆனால் இந்த அணியினருடன் நட்சத்திர வீரர் விராட் கோலி திருவனந்தபுரம் வரவில்லை. இதற்கு காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் விராட் கோலிக்கு காயம் ஏதும் ஏற்பட்டதா அல்லது குடும்பத்தினரை சந்திக்க சென்றுள்ளாரா என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அதேபோல் நெதர்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி பங்கேற்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அணியினடருடன் சரியான நேரத்தில் விராட் கோலி இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Sunday, October 1, 2023, 22:23 [IST]
Other articles published on Oct 1, 2023
English summary
World Cup 2023: Indian Player virat Kohli didn't travel with the Indian team to Trivandrum to participate in the warmup game against Netherlands tomorrow.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+