Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹேஸல்வுட்டிடம் அடுத்தடுத்து அடங்கிப் போகும் "ரன் மெஷின்"...தொடர்ந்து 4 முறை அவுட்!

கான்பெர்ரா: இந்திய கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியா பாஸ்ட் பவுலர் ஹேஸல்வுட் பந்து வீச்சில் தொடர்ந்து நான்காவது முறையாக அவுட் ஆகியுள்ளார்.

வழக்கமாக ஆடம் ஜாம்பாதான் கோலியை அவுட் ஆக்குவதில் முக்கிய பங்கு வகிப்பார். இந்த முறை ஹேஸல்வுட் அந்த பணியை செமையாக செய்துள்ளார்.

Virat Kohli dismissed fourth time in Josh Hazlewood bowling

கிரிக்கெட்டில் என்னதான் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களாக இருந்தாலும் சில பவுலர்கள் மூலம் அவர்களுக்கு தொடர்ச்சியாக கண்டம் இருக்கும். அதே பவுலர்கள் கையில் அவர்கள் தொடர்ந்து அவுட் ஆவார்கள். அந்த வகையில் உலகின் ரன் மெஷின் விராட் கோலி, ஆஸ்திரேலியா சுழற்பந்து பவுலர் ஆடம் ஜாம்பா வந்தாலே கொஞ்சம் பயந்துதான் போவார்.

ஏனெனில் அவரது பவுலிங்கில் கோலி அதிக முறை அவுட் ஆகியுள்ளார். அதனால் இந்த தொடரில் கோலிக்கும், ஜாம்பாவுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தமுறை ஜாம்பாவால் கோலியை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்த முறை கோலி என்னும் நல்ல பாம்பு ஹேஸல்வுட்டின் மகுடிக்கு மயங்கி விட்டது.

இன்று நடந்து வரும் இரண்டாவது போட்டியில் விராட் கோலி 63 ரன்களுடன் ஹேஸல்வுட் பந்தில் கீப்பர் கேரியுடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இன்று மட்டுமல்ல இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களிலும் கோலி அவர் பந்தில்தான் அவுட் ஆகினார். இந்த போட்டியுடன் சேர்த்து தொடர்ந்து 4 து முறையாக ஹேஸல்வுட் கோலியை வீழ்த்தி உள்ளார்.

அதாவது 2020 தொடக்கத்தில் பெங்களுருவில் நடந்த ஒருநாள் ஆட்டத்திலும் ஹஸல்வுட் கோலியை வீழ்த்தி இருந்தார். ட்ரெண்ட் போல்ட், ஜுனைத் கான் மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் கோலியை தொடர்ந்து மூன்று முறை ஆட்டமிழக்க செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டி தொடரில் ஹேஸல்வுட் கோலி மீது ஆதிக்கம் செலுத்துவாரா? இல்லை கோலி அவரது பந்தை வெளுத்து வாங்குவாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Story first published: Wednesday, December 2, 2020, 14:38 [IST]
Other articles published on Dec 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+