For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவருக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா... விராட் கோலியிடம் கேள்வி எழுப்பிய அர்ஜூன் கபூர்

மும்பை : கொரோனா காரணமாக வீட்டில் உள்ளபோதிலும் தன்னுடைய பிட்னஸ், உள்ளிட்டவற்றை சரியாக பேணி வருகிறார் கேப்டன் விராட் கோலி.

இந்நிலையில், பாலிவுட் ஸ்டாரும் விராட்டின் நண்பருமான அர்ஜூன் கபூர், வீடியோ ஒன்றை டேக் செய்து, அதற்கும் விராட்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என நகைச்சுவையுடன் கேட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஒரு நபர், தானே, பௌலிங் போட்டு, தானே பேட்டிங் செய்து, தானே அவுட்டும் ஆகிறார். தற்போது கிரிக்கெட் காதலர்களின் நிலை இது என்றும் அர்ஜூன் கபூர் கூறியுள்ளார்.

வீடியோக்கள் பகிர்வு

வீடியோக்கள் பகிர்வு

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள விராட் கோலி, தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவரது வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று விடுகிறது. நேற்று வெளியிட்ட வீடியோவில்கூட டைனோசராக மாறியிருந்தார் விராட் கோலி.

சிறப்பான விளையாட்டு

சிறப்பான விளையாட்டு

கிரிக்கெட்டை அதிகமாக நேசிப்பதாக எப்போதும் கூறும் விராட் கோலி, தன்னுடைய ஆட்டங்களை விட்டுக் கொடுக்காமல் விளையாடுவார். அதனால்தான் அவரால் தன்னுடைய நிலையை இந்திய அணியில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடிவரும் அவர், அனைத்திலும் 50க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டுள்ளார்.

சிறப்பான பிட்னஸ்

சிறப்பான பிட்னஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பால் வீட்டில் முடங்கியிருந்தாலும் தொடர்ந்து தன்னுடைய வீட்டில் உள்ள ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் விராட் கோலி. இதன் மூலம் தான் மிகுந்த பிட்னசுடன் இருப்பதாகவும், கிரிக்கெட் எந்த நேரத்தில் துவங்கப்பட்டாலும், தான் உடனடியாக பங்கேற்க தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

விராட்டிற்கு சம்பந்தம் உண்டா?

விராட்டிற்கு சம்பந்தம் உண்டா?

இந்நிலையில், விராட் கோலியின் நண்பரும், பாலிவுட் ஸ்டாருமான அர்ஜூன் கபூர், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு நபர் தானே பேட்டிங் செய்து, தானே பௌலிங் செய்து மற்றும் தானே அவுட்டும் ஆகிறார். இந்த வீடியோவை பகிர்ந்து விராட்டை டேக் செய்துள்ள அர்ஜூன் கபூர், கிரிக்கெட் காதலர்களின் தற்போதைய நிலை இது என்றும், விராட் கோலிக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்றும் நகைப்புடன் கேட்டுள்ளார்.

Story first published: Thursday, May 21, 2020, 7:20 [IST]
Other articles published on May 21, 2020
English summary
Arjun Kapoor shared a hilarious cricket video on Instagram
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X