Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் தான் சான்டாகிளாஸ் தாத்தா வந்துருக்கேன்.. கோலியை பார்க்கணுமா? துள்ளிக் குதித்த சிறுவர்கள்!

Recommended Video

Virat Kohli turns Santa for children at a shelter home in Kolkata!

கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, ஆதரவற்ற சிறுவர்கள் இல்லம் ஒன்றில் சான்டாகிளாஸ் வேஷம் போட்டு சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

கிறிஸ்துமஸ் விழா இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த விழாவின் சிறப்பம்சமான சான்டாகிளாஸ் குழந்தைகுளுக்கு பரிசு அளிக்கும் நிகழ்வை ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்தில் கொண்டாடினார் விராட் கோலி.

என்ன பரிசு அளிக்க வேண்டும்?

என்ன பரிசு வேண்டும்?

என்ன பரிசு வேண்டும்?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி கொல்கத்தாவில் இருந்த ஆதரவற்ற சிறுவர் - சிறுமியர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு சான்டாகிளாஸ் என்ன பரிசு அளிக்க வேண்டும் என்பது குறித்து கேட்டு அறிந்தது.

பிடித்த விளையாட்டு வீரர்கள்

பிடித்த விளையாட்டு வீரர்கள்

பின்னர், அவர்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்கள், சூப்பர் ஹீரோக்கள் யார் என்பது குறித்தும் கேட்டது. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிவி சிந்து, தோனி உள்ளிட்ட பிரபல வீரர்களின் பெயர்களை குழந்தைகள் கூறினர்.

சான்டாகிளாஸ் கோலி

சான்டாகிளாஸ் கோலி

அந்த வீடியோ பதிவை விராட் கோலியிடம் காட்டிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ், அவரை சான்டாகிளாஸ் ஆக நடிக்க ஏற்பாடு செய்தது. அதன்படி விராட் கோலி, சண்டாகிளாஸ் வேடம் அணிந்து, அந்த குழந்தைகள் கேட்ட பரிசுகளை எடுத்துக் கொண்டு அந்த இல்லத்திற்கு சென்றார்.

கோலியை பார்க்க வேண்டுமா?

கோலியை பார்க்க வேண்டுமா?

அங்கே முதலில் குழந்தைகள் கேட்ட பரிசுகளை வழங்கிய சான்டாகிளாஸ் தாத்தா, அடுத்து விராட் கோலியை பார்க்க வேண்டுமா? என்று கேட்டார். குழந்தைகள் ஆர்வத்துடன் ஆமாம் என்று பதில் அளித்து கோலி எப்படி இங்கே வருவார் என ஆவலுடன் காத்திருந்தனர்.

கொண்டாடிய குழந்தைகள்

கொண்டாடிய குழந்தைகள்

அப்போது தாடியை நீக்கி, வேடத்தை கலைத்து கோலி வெளியே வர இன்ப அதிர்ச்சியில் குழந்தைகள் வாயடைத்துப் போயினர். பின்னர் அவர்கள் அவரை சுற்றி கட்டிக் கொண்டு கொண்டாடினர்.

அந்த வீடியோ

இந்த நிகழ்வுகள் அடங்கிய வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் சான்டாகிளாஸ் கோலி அந்த வேடத்தில் சிறப்பாக பொருந்தி இருப்பதை பார்க்கலாம்.

Story first published: Saturday, December 21, 2019, 19:06 [IST]
Other articles published on Dec 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+