IND vs WI: ரொம்ப தப்பு.. கோலி செய்த செயல்.. உடைந்து போன நமன் திர்.. முதல் விக்கெட்டை பறித்த விராட்
குவஹாத்தி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி செய்த தவறால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை இளம் வீரர் நமன் திர் இழந்தார்.
குவஹாட்டியில் உள்ள பார்சபரா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் 20வது ஓவரை இளம் வீரர் நமன் திர் வீசினார். அவருக்கு இதுவே இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும். ஆல் ரவுண்டரான அவர் முதல் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை. அப்போது நமன் வீசிய பந்தில் 27 ரன்களுடன் களத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், பந்தை மிட்-விக்கெட் திசையை நோக்கி தூக்கி அடித்தார்.

அங்கு நின்றிருந்த விராட் கோலி, கேட்ச்சை பிடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது கைகளில் பட்டு நழுவி கீழே விழுந்தது. இதனால் ஷாய் ஹோப் அவுட் ஆவதில் இருந்து தப்பினார். இந்திய அணிக்காக தனது 2வது ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இளம் ஆல்ரவுண்டர் நமன் திரிற்கு, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது முதல் விக்கெட்டாக அமைந்திருக்க வேண்டியது. அனுபவ வீரரான விராட் கோலி கேட்ச்சை தவறவிட்டதால், நமன் திர் மிகுந்த ஏமாற்றமடைந்தார்.
ஏற்கனவே தப்பிய ஷாய் ஹோப்
முன்னதாக 12வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும் ஷாய் ஹோப்புக்கு ஒரு கண்டம் தப்பியது. குல்தீப் வீசிய சுழற்பந்தை ஹோப் அவசரமாக தட்டிவிட, பந்து நேராக பந்துவீச்சாளர் குல்தீப்பை நோக்கியே காற்றில் சென்றது. ஆனால் குல்தீப் இடது கையை நீட்டி கேட்ச் பிடிக்க முயன்றும் பந்து தரையில் விழுந்தது. இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு கேட்ச் வாய்ப்புகள் நழுவவிடப்பட்டன.
விராட் கோலி பீல்டிங்கில் சிறந்தவர் எனும் நிலையில் இப்படி ஒரு எளிய கேட்ச்சை தவறவிட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்தியா இரண்டு விக்கெட் வாய்ப்புகளில் தப்பிய ஷாய் ஹோப் சதம் அடித்தார். அவர் 94 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக துவக்க வீரர் ஜான் கேம்ப்பெல் சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். ஹோப் ஆட்டமிழந்த பின் அமீர் ஜாங்கூ சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 40 ஓவர்களுக்குள் 300 ரன்களை தாண்டியது.


Click it and Unblock the Notifications

