Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹேய்…! இங்க பாருய்யா.. இந்த ஆளை..! யாரை பாத்து என்ன பண்ணினாரு இந்த கோலி.. வைரல் வீடியோ..!

Recommended Video

இஷாந்த் சர்மாவின் அரைசதத்தை கொண்டாடிய கோலி... வைரல் வீடியோ

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில், இஷாந்த் சர்மாவின் இன்னிங்சை பார்த்த கோலி, உற்சாகமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, கோலி, அகர்வாலின் அரை சதத்தால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்திருந்தது. ஹனுமா விஹாரியும், ரிஷப் பன்ட்டும் களத்தில் நின்றனர்.

2ம் ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பன்ட் ஆட்டமிழந்தார். பின்னர் விஹாரியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, நிதானமாக ஆடினார். ஆனாலும் அவரால் நிலைக்கமுடியாததால், 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹனுமா விஹாரியுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா, நேர்த்தியாக பேட்டிங் ஆடினார்.

விஹாரி சதம்

விஹாரி சதம்

ஒருமுனையில் இஷாந்த் சர்மா விக்கெட்டை இழந்துவிடாமல் ஆட, மறு முனையில் ஹனுமா விஹாரி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவருக்கு அபாரமாக ஈடு கொடுத்த இஷாந்த் சர்மா, அரைசதம் அடித்தார்.

டக் அவுட் அதிர்ச்சி

டக் அவுட் அதிர்ச்சி

80 பந்துகளில் 57 ரன்கள் அடித்து இஷாந்த் சர்மா ஆட்டமிழக்க, அதன் பின்னர் களத்திற்கு வந்த ஷமி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கடைசி விக்கெட்டாக, விஹாரி 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

69 பந்துகளில் அரைசதம்

69 பந்துகளில் அரைசதம்

முதல் இன்னிங்சில் அரை சதம் கடந்த 4 பேரில் இஷாந்த் சர்மாவும் ஒருவர். அகர்வால், கோலி, விஹாரி ஆகிய மூவரை தவிர, சிறப்பாக ஆடிய மற்றொரு வீரர் இஷாந்த் சர்மா. அவர்69 பந்துகளிலேயே அரைசதத்தை அடித்துவிட்டார்.

முதல் அரைசதம்

முதல் அரைசதம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மாவின் முதல் அரைசதம் இதுதான். தமது 92வது போட்டியில் தான் முதல் அரைசதத்தை அடித்துள்ளார். அதுவும் லேசுப்பட்டதல்ல... அதிரடி அரைசதம்.

கோலி கொண்டாட்டம்

7 பவுண்டரிகள் உட்பட 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மாவின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. அவரது அரைசதத்தை பெவிலியனில் இருந்த கேப்டன் கோலி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார். அந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Story first published: Sunday, September 1, 2019, 13:14 [IST]
Other articles published on Sep 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+