For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிராட்மேன் சாதனையை சமன் செய்த கோலி..சச்சினை முந்தினார்.. வெஸ்ட் இண்டீஸ் எதிராக சம்பவம் செய்த கிங்

போர்ட் ஆப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். டாஸ் வென்று முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஷ்வால் 57 ரன்களும், ரோஹித் சர்மா 80 ரன்களும் எடுக்க முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 139 ரன்களை சேர்த்து.

Virat kohli equals Don bradman record and goes past sachin tendulkar vs wi

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் 10 ரன்னிலும், ரஹானே 8 ரன்களிலும் வெளியேற இந்திய அணி 182 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. அப்போது விராட் கோலியும் ஜடேஜாவும் இணைந்து இந்திய அணியை மீண்டும் சரிவிலிருந்து மீட்டனர். 288 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடங்கியது.

விராட் கோலி 87 ரன்கள் உடனும் ஜடேஜா 36 ரன்கள் உடனும் இன்றைய ஆட்டத்தை தொடங்கினர். இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 180 பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் பல்வேறு ரெக்கார்டுகளை விராட் கோலி படைத்திருக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படும் டான் பிராட்மேனின் சாதனையை விராட் கோலி சமன் செய்து இருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இருவரும் 29 சதங்கள் அடித்து இருக்கிறார்கள். தற்போது இந்திய வீரர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கோலி நான்காவது இடத்தில் இருக்கிறார். சச்சின், டிராவிட், கவாஸ்கர் ஆகியோர் முறையே முதல் மூன்று இடத்தில் இருக்கிறார்கள். இந்த இன்னிங்ஸின் மூலம் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேவாக்கின் ரன்களை தாண்டி சென்று விட்டார்.

Virat kohli equals Don bradman record and goes past sachin tendulkar vs wi

இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக டெஸ்ட் சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி சச்சினை முந்தி சென்றார். இந்த பட்டியலில் சுனில் கவாஸ்கர் ஏழு சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். டிராவிட்,திலீப் சர்தேசாய்,பாலி உமிர்கர் மூன்று சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்க விராட் கோலி 2 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதேபோன்று விராட் கோலி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறார். மேலும் அதிவேகமாக சர்வதேச கிரிக்கெட்டில் 76 சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றிருக்கிறார்.

Story first published: Friday, July 21, 2023, 21:46 [IST]
Other articles published on Jul 21, 2023
English summary
Virat kohli equals Don bradman record and goes past sachin tendulkar vs wi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+