என்ன ஆச்சு 'அடுத்த சச்சினுக்கு...' கோஹ்லி படைத்த மோசமான சாதனை!
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மோசமான சாதனையொன்றை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டக்அவுட் ஆனதன் மூலம், மோசமான சாதனையொன்றின் பட்டியலில் விராட் கோஹ்லி இடம் பிடித்துள்ளார்.
கோஹ்லி ஈடன் கார்டன் மைதானத்தில் லக்மல் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். மழையால் பிட்ச் படு மோசமாக உள்ள நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள்.
தவான் அவுட்டான பிறகு களத்திற்கு வந்த கோஹ்லி மொத்தம் 11 பந்துகளை சந்தித்தார்.

டக்அவுட்டில் சாதனை
11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்க முடியாத கோஹ்லி, லக்மல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இந்த வருடத்தில் அவர் 5வது முறையாக டக்அவுட்டாகிறார். முன்னதாக 1983ல் 31 போட்டிகளில் 5 முறை கபில்தேவ் டக்அவுட்டாகியிருந்தார். இதன் மூலம், ஒரே வருடத்தில் அதிக முறை டக்அவுட்டான இந்திய கேப்டன்கள் வரிசையில் கபில் தேவை சமன் செய்துள்ளார்.

ஆஸி.க்கு எதிராக அதிக டக்
பிப்ரவரியில் புனேவில் நடைபெற்ற ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோஹ்லிக்கு முதல் டக் கிடைத்தது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கைக்கு எதிராக இரண்டாவது முட்டையை பெற்றார் கோஹ்லி. சென்னை ஒருநாள் போட்டி மற்றும் குவஹாத்தி டி20 போட்டிகளில் ஆஸி.க்கு எதிராக கோஹ்லி டக்அவுட்டானார். கொல்கத்தா டெஸ்ட்டுடன் சேர்த்தால் 5 முறை கோஹ்லி டக்அவுட்டாகியுள்ளார்.

தொடர்ந்து டக்அவுட்டுகள்
ஆஸி.க்கு எதிராக 3 முறையும், இலங்கைக்கு எதிராக 2முறையும் கோஹ்லி டக்அவுட்டாகியுள்ளது கவனிக்கத்தக்கது. கொல்கத்தாவை போலவே குவஹாத்தியில் கோஹ்லி டக்அவுட்டானபோதும் அங்கு காலநிலை சரியில்லை என்பது ஒரு ஒற்றுமையாகும்.

இந்திய அணி திணறல்
இலங்கை அணியின் சுரங்கா லக்மல் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். கே.எல்.ராகுல், தவான், விராட் கோஹ்லி ஆகிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். 6 ஓவர்களில் அவர் ரன் ஏதும் கொடுக்கவேயில்லை என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications