For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியோட கைகோர்த்த கோலி... ரெண்டுபேரும் ஒரே சாதனை... சிறப்பான சாதனை!

அகமதாபாத் : இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்துள்ளது.

இந்த போட்டியின்மூலம் கேப்டன் விராட் கோலி முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் கேப்டனாக 60 டெஸ்ட் போட்டிகள் சாதனையை சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்துள்ளது.

சிறப்பான பந்துவீச்சு

சிறப்பான பந்துவீச்சு

போட்டியில் இந்திய அணி பௌலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். அக்சர் படேல், சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டி கேப்டன் விராட் கோலிக்கு கேப்டனாக 60வது போட்டியாகும்.

சமன் செய்த விராட்

சமன் செய்த விராட்

இந்த போட்டியின்மூலம் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் 60 டெஸ்ட் போட்டிகள் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். முன்னதாக கேப்டனாக கோலியின் தலைமையில் 59 போட்டிகளில் 35 போட்டிகளில் வெற்றியும் 14 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது இந்திய அணி.

27 போட்டிகளில் வெற்றி

27 போட்டிகளில் வெற்றி

இதேபோல முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தான் கேப்டனாக செயல்பட்ட 60 போட்டிகளில் 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு கேப்டனாக இது 50வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 4, 2021, 15:30 [IST]
Other articles published on Mar 4, 2021
English summary
This is the 50th Test for Root as England skipper in the longest format of the game
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+