Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி படைக்கப்போகும் பெரும் சாதனை.. கவாஸ்கருக்கு பின் 3வது வீரர்.. டிராவிட் கூட செய்ததில்லை!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டவுள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது.

இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி லெய்செஸ்டர்சையர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் பெரிய கவுரவ பிரச்சினையாகும். கடந்தாண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடைபெற்றன. கொரோனா காரணமாக 5வது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணி 2 -1 என முன்னிலையில் இருப்பதால் வெற்றி பெற கடுமையாக முயற்சித்து வருகிறது.

விராட் கோலியின் ஃபார்ம்

விராட் கோலியின் ஃபார்ம்

இந்திய அணியில் இங்கிலாந்தை திணறடிக்கக்கூடிய வீரர் என்றால் அது விராட் கோலி தான். அந்த அணிக்கு எதிராக மிகப்பெரிய ரெக்கார்ட்களை தன் வசம் ஆக்கியுள்ளார். எனவே இந்த போட்டியில் விராட் கோலி தனது பழைய ஃபார்முக்கு வந்து சதம் அடிப்பார் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

 புதிய சாதனை

புதிய சாதனை

இந்நிலையில் இதே போட்டியில் அவர் பெரும் சாதனை ஒன்றையும் படைக்கவுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி இதுவரை 1960 ரன்கள் அடித்துள்ளார். வரும் போட்டியில் 40 ரன்களை எடுத்துவிட்டால், 2000 ரன்களை கடந்த 3வது இந்தியர் என்ற பெருமையை கோலி பெறுவார்.

வீரர்களின் பட்டியல்

வீரர்களின் பட்டியல்

இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 2,535 ரன்களை அடித்துள்ளார். இவரை தொடர்ந்து கவாஸ்கர் 2483 ரன்களை அடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் கோலியும், தற்போதைய இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 1950 ரன்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Wednesday, June 22, 2022, 17:08 [IST]
Other articles published on Jun 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+