Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி கண்கள் பொய் சொல்லாது.. அவரை பார்த்து தான் உத்வேகம் பெறுகிறேன்.. குர்னல் பாண்டியா கருத்து

பெங்களூரு: ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி அணியின் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில், க்ருணல் பாண்டியா பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் கணிசமான பங்களிப்பை அளித்து வருகிறார். ஆர்சிபி அணியில் தனது இரண்டாவது சீசனில் விளையாடும் ஆல்ரவுண்டர் குர்னல் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். சக வீரரான விராட் கோலியை பார்த்து உத்வேகம் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 10 அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக குர்னல் பாண்டியா அபாரமாக விரளயாடி வென்ற ஆட்டம் அவரது இந்த சீசனின் முக்கிய அம்சமாகும். இந்த ஆட்டம் ஆர்சிபி-யை புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு உயர்த்தியதுடன், மும்பை இந்தியன்ஸை பிளேஆஃப் வாய்ப்பிலிருந்தும் வெளியேற்றியது. கடுமையான வயிற்று வலியுடனும், வெளிப்படையான உடல் அசௌகரியத்துடனும் போராடிய போதிலும், குர்னல் 46 பந்துகளில் 73 ரன்கள் குவித்து, பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

அண்மையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக நடந்த ஆர்சிபி மோதலில் தனது 100வது ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். களத்தில் தனது பங்களிப்பதுடன், குர்னல் அணியில் சமநிலையையும், தலைமைத்துவ பண்புகளையும் வழங்கி வருகிறார்.

ஜியோஸ்டார் தொலைக்காட்சியின் 'சூப்பர்ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் பேசிய குர்னல், "விராட் கோலியைப் பார்த்தே நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் எப்படி ஒரு தொடருக்குத் தயாராகிறார், ஒவ்வொரு பயிற்சி அமர்விலும் அவர் கொண்டு வரும் தீவிரம் வியக்க வைக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

"அவர் கேப்டனாக இருந்தபோது அவருடன் இந்திய அணிக்காக விளையாடியுள்ளேன், எதிராகவும் ஆடியுள்ளேன். இப்போது மீண்டும் அவருடன் ஆடை அறையைப் பகிர்ந்து கொள்வதில் நான் அதிர்ஷ்டசாலி. அவரது பசி இன்னும் நம்பமுடியாதது என்பதை நான் உணர்ந்துள்ளேன். அந்த கண்கள் பொய் சொல்லாது," என்று க்ருணல் மேலும் விளக்கினார்.

"ஒவ்வொரு நெட் பயிற்சியிலும் அதே தீவிரம், மேம்படுத்திக் கொள்வதற்கான அதே பசி. அதுதான் அவரை விராட் ஆக்குகிறது. அவர் எந்தக் காலகட்டத்தில் விளையாடியிருந்தாலும், அவர் மகத்தான வீரர்களில் ஒருவராக இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். மேலும், விளையாட்டுக்கு விராட் இன்னும் நிறைய வழங்க உள்ளது என்று நான் உணர்கிறேன்," என்றும் அவர் கூடுதலாகக் கூறினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் நடப்பு சாம்பியனாக, விராட் கோலி தற்போது நேர்மாறான ஒரு ஐபிஎல் 2026 சீசனை எதிர்கொண்டு வருகிறார். தொடரின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தும், அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட ஆட்டங்களை வெளிப்படுத்திய அவர், அண்மையில் ஒரு அரிய சரிவைச் சந்தித்துள்ளார்.

தனது ஐபிஎல் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக, அடுத்தடுத்த ஆட்டங்களில் டக் அவுட் ஆகியுள்ளார். ஆயினும், கோலி 11 போட்டிகளில் 379 ரன்கள் எடுத்துள்ளார், தனது இதுவரை இல்லாத மிகவும் ஆக்ரோஷமான சீசன் ஸ்ட்ரைக் ரேட்டைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

Story first published: Tuesday, May 12, 2026, 16:28 [IST]
Other articles published on May 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+