Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா -இலங்கை சர்வதேச டி20 தொடர் : பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலிக்கு காயம்

Recommended Video

INDIA VS SRI LANKA 1st T20 | Virat Kohli was hit on the little finger of his left-hand in training

கவுஹாத்தி : இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெறவுள்ள சர்வதேச டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று துவங்கவுள்ள நிலையில் நேற்றைய பயிற்சி ஆட்டத்தின்போது விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கவுஹாத்தி பாரஸ்பாரா மைதானத்தில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த பந்து அவரது இடதுகையின் சுண்டுவிரலில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து உடனடியாக மைதானத்திற்கு வந்த அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் அவரது காயத்திற்கு ஸ்ப்ரே அடித்து சிகிச்சை மேற்கொண்டார்.

கவுஹாத்தியில் துவக்கம்

கவுஹாத்தியில் துவக்கம்

ஆண்டின் முதல் தொடராக இந்தியா மற்றும் இலங்கை இடையில் சர்வதேச டி20 போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி கவுஹாத்தியில் இன்று நடைபெறுகிறது.

தயாராகவுள்ள அணியினர்

தயாராகவுள்ள அணியினர்

கவுஹாத்தியின் பாரஸ்பாரா மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு இந்த போட்டிக்கான டாஸ் போடப்படவுள்ளது. தொடர்ந்து 7 மணிக்கு போட்டி துவங்கவுள்ளது.

இலங்கையை வெல்ல தீவிரம்

இலங்கையை வெல்ல தீவிரம்

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கடந்த ஆண்டின் இறுதி தொடரில் இந்தியா வெற்றி கொண்ட நிலையில், இந்த ஆண்டின் முதல் தொடரிலும் வெற்றி பெற முனைப்புடன் உள்ளது. இதையடுத்து கவுஹாத்தியில் இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

கேப்டன் விராட் கோலிக்கு காயம்

கேப்டன் விராட் கோலிக்கு காயம்

கவுஹாத்தியின் பாரஸ்பாரா மைதானத்தில் நேற்று இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்ட நிலையில், வேகமாக அடிக்கப்பட்ட பந்து ஒன்று விராட்கோலியின் இடதுகை சுண்டுவிரலை பதம் பார்த்தது.

உடனடி சிகிச்சையளித்த பிசியோ

உடனடி சிகிச்சையளித்த பிசியோ

இதையடுத்து உடனடியாக மைதானத்திற்கு வந்த பிசியோ நிதின் படேல், விராட் கோலிக்கு ஸ்ப்ரே அடித்து சிகிச்சை மேற்கொண்டார்.

இந்திய அணி அபாரம்

இந்திய அணி அபாரம்

கடந்த 12 ஆண்டுகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் இலங்கையை 16 போட்டிகளில் வென்றுள்ளது. கடந்த 2014ல் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை இந்தியாவை வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 5, 2020, 11:08 [IST]
Other articles published on Jan 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+