Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேணா... வலிக்குது.. அழுதுடுவேன்... 7வது முறையாக சந்தீப்பின் பௌலிங்கில் வீழ்ந்த விராட் கோலி!

ஷார்ஜா : ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பௌலர் சந்தீப் ஷர்மா, 7வது முறையாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலியை நேற்றைய போட்டியில் வீழ்த்தியுள்ளார்.

நேற்றைய போட்டியில் 7 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி வெறும் 7 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

Virat Kohli falls to Sandeep Sharma for Seventh time in IPL

இதுவரை 12 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சந்தீப் ஷர்மாவின் பந்துவீச்சை எதிர்கொண்டுள்ள கோலி, 139 ஸ்டிரைக் ரேட்டில் 68 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

ஷார்ஜாவில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சந்தீப் ஷர்மாவின் பௌலிங்கில் அவுட் ஆகியுள்ளார் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி. 7 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே எடுத்த விராட் கோலி, சந்தீப் ஷர்மாவின் பௌலிங்கை எதிர்கொள்ள முடியாமல் அவுட் ஆகியுள்ளார். இதுவரை ஐபிஎல் சீசன்களில் சந்தீப்பின் பௌலிங்கில் 7 முறை அவர் அவுட்டாகியுள்ளார்.

மேலும் இதுவரை 12 இன்னிங்சில் சந்தீப் ஷர்மாவின் பந்து வீச்சில் விளையாடியுள்ள கோலி, 139 ஸ்டிரைக் ரேட்டில் 68 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஐபிஎல்லில் இதேபோல ஒரே பௌலர் கையால் அதாவது ஜாகிர் கானின் பௌலிங்கில் 7 முறை எம்எஸ் தோனி அவுட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 1, 2020, 15:04 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+