Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுல்லாம் ரொம்ப அநியாயம்.. லக்னோ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய கோலி ரசிகர்கள்.. ஆட்டம் நிறுத்தம்

ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லக்னோ ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தில் விராட் கோலி ரசிகர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. லக்னோ, ஆர் சி பி அணிகள் மோதியபோது விராட் கோலிக்கும் கவுதம் கம்பிருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதனை அடுத்து லக்னோ வீரர்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் விராட் கோலி ரசிகர்கள் அவர்களை கிண்டல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆட்டத்தின் 19.3 வது ஓவரில் லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான், ஹைதராபாத் வீரர் கிளாசெனுக்கு புல்டாஸ் வீசினார்.

Virat kohli fans attacked LSG Players in SRH Game created controversy

ஆனால் இதற்கு நடுவர் நோபால் தரவில்லை. இதன் அடுத்து மூன்றாம் நடுவர் அது நோபால் என தெரிந்தும் நடுவர் அதனை நோ பால் வழங்கவில்லை. இதனால் கிளாசெனும் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கடுப்பான ஹைதராபாத் அணி அணிந்திருந்த கோலி ரசிகர்கள் கோலி கோலி என்று கத்தியவாறு நெட்டு போல்டுகளை லக்னோ அணி வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் வீசினார்கள்.

இதனை அடுத்து அங்கு இருந்த லக்னோனி வீரர்கள் அங்கிருந்து எழுந்து ஓடினர். இதனை எடுத்து ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மைதானத்திற்குள் வரும் போது பல பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டு தான் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருக்கும் போது எப்படி அவர்களது கையில் நெட்டு போல்டுகள் வந்தது என கேள்வி எழுந்து உள்ளது.

மேலும் இது தொடர்பாக லக்னோ அணி நிர்வாகம் சார்பாக ஐபிஎல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லக்னோவின் மீது தாக்குதல் நடத்திவிட்டு கோலி கோலி என கத்தியது விராட் கோலியின் பெயருக்கு களங்கம் விளக்கும் வகையில் உள்ளது.

Story first published: Saturday, May 13, 2023, 21:56 [IST]
Other articles published on May 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+