கர்மா ஒரு பூமராங்.. கங்குலிக்கு அடுத்தடுத்து நடக்கும் சோக சம்பவம்.. வச்சு செய்யும் விராட் கோலி ஆர்மி
மும்பை: சவுரவ் கங்குலியை பிசிசிஐ கைவிட்டதை அடுத்து விராட் கோலி ரசிகர்கள் பழிதீர்த்து வருகின்றனர்.
பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 18ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து அடுத்த தலைமை யாருக்கு என்ற ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கங்குலி விலகல்
பிசிசிஐ-ன் தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கும் நீடிக்க விரும்புவதாக சவுரவ் கங்குலி விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவரின் செயல்பாடுகளில் திருப்தியில்லை எனக்கூறி பிசிசிஐ குழு அவருக்கு வாய்ப்பு தர மறுத்துள்ளது. இதனையடுத்து முன்னாள் வீரர் ரோஜர் பின்னியை புதிய தலைவராக தேர்வு செய்யவும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.

கைவிட்டது பிசிசிஐ
ஐசிசி தலைவருக்கான தேர்தலில் இந்தியாவின் சார்பில் சவுரவ் கங்குலியை நிற்கவைப்பதாக தகவல் வெளியாகியிருந்தன. ஆனால் அதுவும் தற்போது நடக்காது எனத் தெரிகிறது. இதன் மூலம் பிசிசிஐ நிர்வாகத்திற்கும் - கங்குலிக்குமான உறவு இந்த மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது.

கோலி ரசிகர்கள் என்ட்ரி
இந்நிலையில் கங்குலிக்கு எதிராக விராட் கோலி ரசிகர்கள் கிளம்பியுள்ளனர். அதாவது இந்திய அணியின் கேப்டன் பதவியில் நீடிக்க விரும்புவதாக விராட் கோலி கூறிய போதும் கங்குலி அதனை ஏற்கவில்லை என கூறப்பட்டது. மேலும் பிசிசிஐ சார்பில் விராட் கோலி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குவியும் விமர்சனம்
எனவே "அன்று கோலி வாய்ப்பு கேட்ட போது நீங்கள் புறக்கணித்தீர்களே, இன்று நீங்கள் வாய்ப்பு கேட்கும் போது பிசிசிஐ புறக்கணித்துள்ளது. பிசிசிஐ-ன் ஆதரவு எனக்கூறி கோலி மீது நடவடிக்கை எடுத்த உங்களை இன்று பிசிசிஐ கைவிட்டுள்ளது" எனக்கூறி ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். சவுரவ் கங்குலிக்கு ஆறுதல் தரும் வகையில் ஐபிஎல் சேர்மன் பதவி தர முன் வந்தனர். ஆனால் அவர் அதனை வேண்டாம் என மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications