Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவரு குணத்தை பாருயா” கோலியை வேண்டுமென்றே சீண்டும் பிசிசிஐ?..ட்வீட்டால் மீண்டும் உயிர்பெரும் சர்ச்சை

பெங்களூரு: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை வேண்டுமென்றே சூடாக்கும் விதமாக பிசிசிஐ காய்களை நகர்த்தி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்சி சர்ச்சைகளுக்கு முடிவு கட்டிய பிறகு தற்போது தான் விராட் கோலி நிம்மதியாக சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

ஆனால் அவரின் மீதான அதிருப்தி இன்னும் பிசிசிஐ-க்கு உள்ளது என ரசிகர்கள் பிரச்சினையை கிளப்பியுள்ளனர்.

 கங்குலி பேச்சு

கங்குலி பேச்சு

பத்திரிகையாளர் சந்திப்பின் போது கங்குலி கூறியது அனைத்தும் பொய்யான தகவல்கள் என்பது போல விராட் கோலி விளக்கமளித்தார். ஆனால் அவரின் இந்த கருத்திற்கு பதிலளிக்க கங்குலி மறுத்துவிட்டார். எனினும் கோலியுடனான பிரச்சினையை இனி பிசிசிஐ சார்பில் தான் கையாளப்படும் என தெரிவித்தார்.

கோலியை சீண்டும் பிசிசிஐ

கோலியை சீண்டும் பிசிசிஐ

இந்நிலையில் அவரின் வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் தற்போது தெரியவருகிறது போல் உள்ளது. இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்க சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே உள்ள இந்தியாவின் U19 அணி வீரர்களிடம் ரோகித் சர்மா ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர்களுக்கு தனி அறிவுரை வகுப்புகளையும் எடுத்து வருகிறார்.

பிசிசிஐ பதிவு

பிசிசிஐ பதிவு

இதுகுறித்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ள பிசிசிஐ, விலைமதிப்பற்ற பாடங்களை ரோகித் சர்மா எடுத்து வருகிறார். தனது பெரும்பாலான நேரங்களை இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி வீரர்களிடம் செலவிட்டு வருகிறார். அவர்களை தயார் செய்து வருகிறார் எனக்குறிப்பிட்டுள்ளது.

 கொந்தளிக்கும் ரசிகர்கள்

கொந்தளிக்கும் ரசிகர்கள்

இந்த பதிவுகளை கண்ட கோலி ரசிகர்கள், வேண்டுமென்றே பிசிசிஐ வம்பிழுப்பதாக கூறி வருகின்றனர். ஏனென்றால் விராட் கோலி பெரும்பாலும் போட்டிகள் இல்லாத சமயத்தில் தனியாக தான் இருப்பார். பெரியளவில் மற்ற வீரர்களுடன் கலந்தாலோசிப்பதை பார்க்க முடியாது. ஆனால் ரோகித் சர்மா அடுத்த தலைமுறை வீரர்களை தயார் செய்வதாக பிசிசிஐ பெருமையாக கூறி, விராட் கோலியை சுட்டிக்காட்டுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ரோகித் விலகல்

ரோகித் விலகல்

இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையில் ஆடும் இந்த தொடரில் காயம் காரணமாக ரோகித் சர்மா விலகிவிட்டார். எனினும் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா கேப்டன்சி செய்வார் எனக்கூறப்படுகிறது.

Story first published: Friday, December 17, 2021, 19:47 [IST]
Other articles published on Dec 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+