Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதி வேகமாக 24 சதங்கள்.. பான்டிங் சாதனையைக் கடந்தார் கோஹ்லி

மெல்போர்ன்: ஒரு நாள் போட்டிகளில் அதி வேகமாக 24 சதங்கள் போட்டு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங்கின் சாதனையைக் கடந்துள்ளார் விராத் கோஹ்லி.

இன்று நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் சில சாதனைகளைப் படைத்துள்ளார் கோஹ்லி. அதி வேகமாக 7000 ரன்களைக் கடந்த சாதனை படைத்த கோஹ்லி மேலும் ஒரு சாதனையையும் படைத்தார்.

அதி வேகமாக 24 சதங்களைப் போட்ட சாதனைதான் அது. அந்த சாதனை இதுவரை ரிக்கி பான்டிங்கிடம்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3வது போட்டியில் சதம்

3வது போட்டியில் சதம்

3வது ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி சிறப்பாக ஆடி 117 ரன்களை விளாசினார். கூட சாதனைகளையும் படைத்தார்.

அதி வேக 24 சதம்

அதி வேக 24 சதம்

அதி வேகமாக் 24 சதம் போட்ட சாதனை இது நாள் வரை ரிக்கி பான்டிங்கிடம் இருந்தது. அதை தற்போது முறியடித்துள்ளார் கோஹ்லி.

161வது இன்னிங்ஸில்

161வது இன்னிங்ஸில்

தனது 161வது இன்னிங்ஸில் 24வது சதத்தைப் போட்டுள்ளார் கோஹ்லி. மற்றவர்களுக்கு அதிக அளவிலான இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன.

பான்டிங்குக்கு 278 இன்னிங்ஸ்

பான்டிங்குக்கு 278 இன்னிங்ஸ்

ரிக்கி பான்டிங் இந்த 24 சதம் என்ற சாதனையை 278 இன்னிங்ஸ்களில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயசூர்யாவுக்கு 370 இன்னிங்ஸ்களும், சங்கக்கராவுக்கு 378 இன்னிங்ஸ்களும் தேவைப்பட்டன.

5வது இடத்தில்

5வது இடத்தில்

தற்போது ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் கோஹ்லி.

முதலிடத்தில் சச்சின்

முதலிடத்தில் சச்சின்

முதலிடத்தில் சச்சின் 49 சதங்களுடன் உட்கார்ந்திருக்கிறார். 2வது இடத்தில் 30 சதங்களுடன் ரிக்கியும், 3வது இடத்தில் 28 சதத்துடன் ஜெயசூர்யாவும், நான்காவது இடத்தில் 25 சதத்துடன் சங்கக்கராவும் உள்ளனர். அடுத்த இடத்தில் இருக்கிறார் கோஹ்லி.

Story first published: Sunday, January 17, 2016, 15:11 [IST]
Other articles published on Jan 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+