ஓவராக சவுண்டு விட்ட விராட் கோலி.. அபராதம் போட்ட நடுவர்.. இது நமக்கு தேவையா?
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு கடந்த இரண்டு நாட்களாக போதாத காலமாக உள்ளது. அண்மையில் டெல்லி அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடிய போது கங்குலியை அவர் மதிக்காமல் போனார்.
மேலும் விராட் கோலி உடைய ரசிகர்கள் கங்குலியை தரக்குறைவாக விமர்சித்து இருந்தார்கள். இதற்கே கோலியை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பொளந்தார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி வழக்கம் போல் களத்தில் ஓவராக கத்தி கூச்சல் போட்டார்.

சிஎஸ்கே வீரர் ருதுராஜ் ஆட்டம் இழந்த போதும்,சிவம் துபே கேட்ச் ஆனபோதும் விராட் கோலி தாம் ரசிகர்களால் மதிக்கப்படும் மாபெரும் வீரர் என்பதை மறந்து களத்தில் கத்தி கூச்சல் போட்டார். இதை பார்க்கும் போது ஒரு விக்கெட் எடுத்ததற்கு ஏன் விராட் கோலி இப்படி கத்துகிறார் என்று தோன்றியது.
இதேபோன்று விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். அங்கு டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்த விராட் கோலி மேக்ஸ்வெல் சிக்சர் அடித்த போதெல்லாம் கத்தி கூச்சலிட்டார். விராட் கோலியின் இந்த நடவடிக்கைகள் ஐபிஎல் விதிமீறல்களுக்கு எதிரானது என்பதால் அவருக்கு போட்டியின் ஊதியத்திலிருந்து 10% அபராதம் விதித்து நடுவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
( எனினும் எந்த காரணம் என்பதை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை) விராட் கோலியின் இந்த செயலுக்கு ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆர் சி பி அணிக்காக விளையாடும் விராட் கோலி களத்தில் தன்னை மறந்து செயல்படுவதாக அவர்கள் விமர்சித்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற வீரருக்கு இதுபோன்று நன்னிடத்தை காரணமாக அபராதம் வாங்குவது சரி இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications