
டெஸ்ட் போட்டியில் கோலி முதலிடம்
ஐசிசி தரவரிசைப்பட்டியல் அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் நிலையில் நேற்று ஆண்டின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் டெஸ்ட் போட்டி பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்து பிடித்துவரும் கோலி, தற்போது ஆண்டு இறுதியிலும் அந்த இடத்தை அப்படியே பிடித்துக் கொண்டுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடம்
இந்த ஆண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் கோலி 11 இன்னிங்சில் பங்கேற்று ஆடியுள்ளார். இதில் 612 ரன்களை குவித்து 928 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். இதேபோல 8 டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்சில் 911 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

4வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்
3வது இடத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுசாக்னேவும் இடம் பெற்றுள்ளனர்.மார்னஸ் ஒரு இடம் முன்னேறி புஜாராவின் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

புஜாரா, ரஹானே இடம்பிடிப்பு
இதேபோல முதல் 10 இடங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் சத்தீஸ்வர் புஜாராவும் அஜிங்கியா ரஹானேவும் இடம்பிடித்துள்ளனர். புஜாரா தன்னுடைய 4வது இடத்தில் இருந்து ஒரு இடம் கீழிறங்கி 5வது இடதையும் ரஹானே தனது 7வது இடத்தில் தொடர்ந்தும் உள்ளனர்.

விராட் கோலியின் சாதனை
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் ஆண்டு முடிவில் கேப்டன் விராட் கோலி தனது முதலிடத்தை உறுதி செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடம்
தனிப்பட்ட முறையில் தன்னுடைய சாதனைகளை தொடரும் விராட் கோலி, தான் தலைமையேற்று நடத்திவரும் இந்திய அணியையும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் முதலிடத்தில் வைத்துள்ளார்.

அஸ்வின், ஷமி 2 இடங்கள் முன்னேற்றம்
இதேபோல முதல் பத்து இடங்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பும்ரா தனது 6வது இடத்திலேயே நிலை கொண்டிருக்க அஸ்வின் மற்றும் ஷமி இரண்டு இடங்கள் முன்னேறி 9வது மற்றும் 10வது இடங்களில் உள்ளனர்.

பாட் கமின்ஸ் முதலிடம்
ஐசிசி தரவரிசையில் பௌலிங்கில் முதல் மூன்று இடங்களை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ், நியூசிலாந்தின் நீல் வாக்னர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் காகிசோ ரபாடாவும் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











