Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாப் 100 பணக்கார வீரர்கள்.... கோஹ்லிக்கு எந்த இடம் தெரியுமா!

டெல்லி: உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

உலக புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் முதலிடத்தில் உள்ளார்.

அவருடைய மொத்த வருமானம் ரூ.1,906 கோடியாகும். கடந்த ஏழு ஆண்டுகளில் நான்காவது முறையாக அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, ரூ.743 கோடி வருமானத்துடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ, நெய்மர் அதற்கடுத்த இடங்களில் உள்ளனர்.

கூடைப்பந்து வீரர்கள்

கூடைப்பந்து வீரர்கள்

இந்த முறை, டாப் 100 பணக்கார வீரர்களில், அமெரிக்காவின் என்பிஏ எனப்படும் தேசிய கூடைப்பந்து சங்க வீரர்கள் 40 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 32 பேர் இந்தப் பட்டியலில் இருந்தனர்.

83வது இடத்தில் கோஹ்லி

83வது இடத்தில் கோஹ்லி

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியராக கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி உள்ளார். அவர் ரூ.161 கோடி வருமானத்துடன் பட்டியலில் 83வது இடத்தில் உள்ளார். இதைத் தவிர டுவிட்டரில் அதிக பாலோயர்களை கொண்ட வீரராகவும் உள்ளார். அவரை 2.5 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

பெண்கள் இல்லை

பெண்கள் இல்லை

இந்த 100 பேர் பட்டியலில் ஒரு பெண்கள் கூட இல்லை. கடந்த ஆண்டு லீ நா, மரியா ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் இருந்தனர். இதில் லீ நா ஓய்வு பெற்று விட்டார். ஷரபோவா போதை மருந்து தடையால் இடையில் விளையாடவில்லை. தாயானதால் செரீனாவும் ஓராண்டாக விளையாடவில்லை.

அமெரிக்கா ஆதிகம்

அமெரிக்கா ஆதிகம்

இந்தப் பட்டியலில் கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (6வது இடம்), டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (7), கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் (16), டென்னில் வீரர் ரபேல் நடால் (20) உள்ளிட்டோர் உள்ளனர். 22 நாடுகளைச் சேர்ந்த வீரர்களில் மிகவும் அதிகபட்சமாக அமெரிக்காவைச் சேர்ந்த 66 பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

Story first published: Wednesday, June 6, 2018, 22:01 [IST]
Other articles published on Jun 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+