Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியின் அசத்தல் 3 ஆண்டுகள் ரெக்காட்.. இவரையா அணியை விட்டு நீக்கனும்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ரன் அடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் போர் குரல் எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை அதிரடியாக நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

3 ஆண்டுகள் ரெக்கார்ட்

3 ஆண்டுகள் ரெக்கார்ட்

நேற்று நடைபெற்ற லண்டன் லாட்ஸ் ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி 16 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். எனினும் அவர் மூன்று பவுண்டர்களை விளாசினார்.சரி, விராட் கோலி உண்மையிலேயே பார்மில் இருக்கிறாரா அவருடைய கடைசி மூன்று ஆண்டுகளில் ஒரு நாள் போட்டியில் எவ்வளவு ரன்கள் அடித்தார் என்பதை தற்போது பார்க்கலாம்.

2019 மற்றம் 20ஆம் ஆண்டு

2019 மற்றம் 20ஆம் ஆண்டு

விராட் கோலி 2019 ஆம் ஆண்டு தான் கடைசியாக சதம் விளாசினார் .அந்த ஆண்டு 26 ஒரு நாள் போட்டியில் விளையாடி 1377 ரன்கள் விளாசினார் . இதில் ஐந்து அரை சதங்களும் , 7 சதங்களும் அடங்கும். 2020 ஆம் ஆண்டு விராட் கோலி ஒன்பது போட்டிகளில் விளையாடி 431 ரன்கள் விளாசி இருக்கிறார். இதில் ஐந்து அரை சதங்கள் அடங்கும் .

2022ஆம் ஆண்டு

2022ஆம் ஆண்டு

2021 ஆம் ஆண்டு விராட் கோலி 3 போட்டிகள் விளையாடி 129 ரன்கள் விளாசி இருக்கிறார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும். 2022 ஆம் ஆண்டு விராட் கோலி 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 158 ரன்கள் அடித்திருக்கிறார். இதிலும் இரண்டு அரை சதங்கள் அடங்கும் கடைசியாக நடைபெற்ற 12 போட்டிகளில் விராட் கோலி ஆறு அரை சதங்கள் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார்.

மாயை உருவானது

மாயை உருவானது

இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் விராட் கோலி 19 போட்டிகளில் விளையாடி 218 ரண்களை அடித்திருக்கிறார். விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் பொறுத்த வரை சிறப்பாக விளையாடி இருக்கிறார். எனினும் அவர் சதம் அடிக்காத காரணத்தால் தற்போது அவர் பார்மில் இல்லாத மாதிரி ஒரு மாயை உருவாகிவிட்டது என்பதை நிதர்சனம்.

Story first published: Friday, July 15, 2022, 19:38 [IST]
Other articles published on Jul 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+