சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
ஆயினும் இந்த தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய 3வது போட்டியில் 61 ரன்களுக்கு 85 ரன்களை கேப்டன் விராட் கோலி குவித்த போதிலும் அது கானல் நீரானது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த தொடர்களில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2க்கு ஒன்று என்ற கணக்கிலும் இதேபோல இந்தியா டி20 தொடரை 2க்கு ஒன்று என்ற கணக்கிலும் வெற்றி கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி 61 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸ்களும் அடங்கும். நெருக்கடியான சூழலில் வீரர்கள் யாரும் சப்போர்ட் செய்யாத நிலையில் தனி ஒருவராக இருந்து இந்த ஸ்கோரை அவர் பூர்த்தி செய்தார்.
ஆயினும் அவரது முயற்சி வீணானது. ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் இந்தியாவை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.