For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

300 கோடி ஒப்பந்தத்தை தூக்கி எறிந்த விராட் கோலி.. தொழில் அதிபராக மாஸ்டர்பிளான்!

மும்பை: விராட் கோலி சுமார் 300 கோடி ரூபாய் விளம்பர ஒப்பந்தம் ஒன்றை மறுத்து இருக்கிறார். இது அவருக்கு பெரும் இழப்பாக இருக்குமே என பார்த்தால் அதுதான் இல்லை. விராட் கோலி அதை விட பெரிய தொகையை சம்பாதிக்க திட்டமிட்டே இந்த ஒப்பந்தத்தை மறுத்து இருக்கிறார். விராட் கோலியின் விளம்பர ஒப்பந்தங்கள் என்னென்ன? எந்த ஒப்பந்தத்தை மறுத்தார்? எப்படி பெரிய தொழில் அதிபராக திட்டமிட்டு இருக்கிறார்? என விரிவாக பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், ரன் மெஷினுமான விராட் கோலி, மைதானத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதோடு மட்டுமல்லாமல், வணிக உலகிலும் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார். ஆடை பிராண்டுகள், உணவகங்கள், தொழில்நுட்பம், ஆரோக்கியம், நிதி என பல்வேறு துறைகளில் அவரது முதலீடுகளும், விளம்பர தூதர் ஒப்பந்தங்களும் பரந்து விரிந்துள்ளன.

கோலியின் பிராண்ட் மதிப்பு 2024 இல் 227.9 மில்லியன் டாலர் (சுமார் 1912 கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவரது வருடாந்திர விளம்பர வருமானம் 200 கோடியைத் தாண்டும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் PUMA (பூமா) நிறுவனம் 300 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் அளிக்க முன்வந்தும் அதை மறுத்துள்ளார். மேலும், அந்த நிறுவனத்துக்கு போட்டியாக தனது One8 நிறுவனத்தை வளர்க்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அகிலிட்டாஸ் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தனது One8 பிராண்டை வளர்க்க அவர் முடிவு செய்து இருக்கிறார். இதில் சுவாரசியம் என்னவெனில் அகிலிட்டாஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இணை உரிமையாளர் அபிஷேக் கங்குலி முன்பு PUMA இந்தியா மற்றும் தெற்காசிய பகுதியின் மேலாண்மை இயக்குனராக இருந்தவர்.

Virat Kohli From Cricket Icon to Business Tycoon - rejected PUMA s 300 crore deal

அவர் அந்த நிறுவனத்தில் இருந்து பிரிந்து வந்து தனது சொந்த நிறுவனத்தை துவக்கினார். தற்போது விராட் கோலி அவருடன் இணைந்து தனது பிராண்டை பெரிதாக மாற்ற முயற்சி எடுக்க இருக்கிறார். அதன் மூலம் எட்டு ஆண்டுகளில் 300 கோடி அளிக்க முன் வந்த PUMAவின் ஒப்பந்தத்தை விட அதிக வருவாயை அதே எட்டு ஆண்டுகளில் ஈட்ட முடியும் என அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

விராட் கோலியின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து மேலும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. அவர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை குறைத்து விட்டு சொந்த நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலி தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வு காலத்தை திட்டமிட்டு வருகிறார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

விராட் கோலி எத்தனை நிறுவனங்களை நடத்தி வருகிறார்? எத்தனை நிறுவனங்களின் விளம்பர தூதராக இருக்கிறார்? என பார்க்கலாம்.

கோலியின் சொந்த மற்றும் இணை நிறுவனங்கள்:

One8: 2017 இல் பூமாவுடன் இணைந்து கோலியால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், விளையாட்டு மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த ஆடை, காலணிகள் மற்றும் உபகரணங்களை வழங்குகிறது. இது விராட் கோலியின் உடற்தகுதி மீதான ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. விளையாட்டு வீரரான அவர் தனது துறை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பது அதன் விரைவான வளர்ச்சிக்கும் உதவும்.

மேலும், 'One8 கம்யூன்' என்ற பெயரில் மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, புனே ஆகிய நகரங்களில் 8 உணவகங்களையும் நடத்தி வருகிறது. பூமாவுடனான ஒப்பந்தம் 2024 இல் முடிவடைந்த நிலையில், தற்போது அகிலிட்டாஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து One8 பிராண்டை மேலும் விரிவுபடுத்த கோலி கவனம் செலுத்தி வருகிறார்.

WROGN: இது இளைஞர்களுக்கான ஃபேஷன் பிராண்ட் ஆகும். யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ் பிரைவேட் லிமிடெட் (USPL) இதை நிர்வகிக்கிறது. கிராஃபிக் டீ-ஷர்ட்கள், சட்டைகள் மற்றும் டெனிம் ஆடைகளை இது வழங்குகிறது. 2020 இல் கோலி USPL இல் 19.3 கோடி முதலீடு செய்தார். 2024 இல் ஆதித்யா பிர்லாவின் TMRW நிறுவனம் இதில் 16% பங்குகளை வாங்கியுள்ளது. இந்த பிராண்ட் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருகிறது. தற்போது இந்தியாவின் முன்னணி நவீன ஆடை பிராண்ட்டில் இதுவும் இடம் பெற்றுள்ளது.

முதலீடு மற்றும் விளம்பரத் தூதராக கோலி:

கோலி பல முன்னணி பிராண்டுகளின் விளம்பரத் தூதராகவும், சில ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீட்டாளராகவும் செயல்படுகிறார்:

Noise (விளம்பரத் தூதர்): டிசம்பர் 2022 முதல், ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் போன்ற இந்திய தொழில்நுட்ப பிராண்டான Noise இன் விளம்பரத் தூதராக உள்ளார்.

Asian Paints (விளம்பரத் தூதர்): ஏப்ரல் 2024 முதல், நியோ பாரத் லேடெக்ஸ் பெயிண்டிற்கான விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Amaze (விளம்பரத் தூதர்): இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி பிராண்டான Amaze உடனான ஒப்பந்தம் 2024 இல் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது (2027 வரை).

Duroflex (விளம்பரத் தூதர்): மே 2023 முதல், மெத்தைகள், தலையணைகள் போன்ற தூக்க தீர்வுகளை வழங்கும் Duroflex இன் தூதராக உள்ளார்.

TIDL (விளம்பரத் தூதர்): ஜூன் 2024 முதல், அமெரிக்காவைச் சேர்ந்த வலி நிவாரண பிராண்டான TIDL இன் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

MRF Tyres (விளம்பரத் தூதர்): 2015 முதல் MRF டயர்ஸ் நிறுவனத்தின் தூதராக உள்ளார். 2017 இல் 8 ஆண்டுகளுக்கு 100 கோடிக்கு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது (ஆண்டுக்கு 12.5 கோடி). இந்த ஒப்பந்தம் 2025 வரை செயலில் உள்ளது.

Myntra (விளம்பரத் தூதர்): 2019 முதல் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து Myntra வின் தூதராக செயல்படுகிறார்.

Rage Coffee (முதலீட்டாளர் & தூதர்): 2022 இல் இந்த D2C காபி பிராண்டில் முதலீடு (2.5% பங்கு) செய்த கோலி, அதன் விளம்பரத் தூதராகவும் உள்ளார்.

Blue Tribe (முதலீட்டாளர் & தூதர்): 2021 இல் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து, தாவர அடிப்படையிலான இறைச்சி ஸ்டார்ட்அப் ஆன Blue Tribe இல் முதலீடு செய்துள்ளார்.

Digit Insurance (முதலீட்டாளர் & தூதர்): 2022 இல் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து 2.5 கோடி முதலீடு (0.25% பங்கு) செய்துள்ளார். 2024 இல் Digit நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டின் (IPO) மூலம் சந்தைக்கு வந்தபோது, இவர்களது பங்குகளின் மதிப்பு சுமார் 10 கோடியாக உயர்ந்தது.

Chisel Fitness (முதலீட்டாளர் & இணை உரிமையாளர்): 2015 இல் 90 கோடி முதலீடு (30% பங்கு) செய்து, நாடு முழுவதும் உடற்பயிற்சி மையங்களை ஊக்குவித்து வருகிறார்.

சமீபத்திய மாற்றங்கள்:

குறிப்பிடத்தக்க வகையில், பூமாவுடனான தனது 8 ஆண்டுகால, 110 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை 2024 இல் கோலி முடித்துக் கொண்டார். 300 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்த வாய்ப்பை நிராகரித்து, தனது சொந்த பிராண்டான One8 இல் அகிலிட்டாஸ் ஸ்போர்ட்ஸுடன் இணைந்து கவனம் செலுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

Story first published: Saturday, April 12, 2025, 19:19 [IST]
Other articles published on Apr 12, 2025
English summary
Virat Kohli: From Cricket Icon to Business Tycoon - rejected PUMA’s 300 crore deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+